தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக திகழ்பவர்கள் நட்டி நடராஜ். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் சீசா. இந்த படத்தில் நிஷாந்த் ரூசோ, பாடினி குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை குணா சுப்பிரமணியம் இயக்குகிறார். இந்த படத்தில் எஸ். சரண் குமார் இசையமைத்து இருக்கிறார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் நிஷாந்த் ரூசோ, பாடினி இருவருமே காதலித்து திருமணம் செய்கிறார்கள். நிஷாந்த் ரூசோ மருத்துவமனையில் வேலை செய்கிறார். அங்கு வேலை செய்யும் மூர்த்தி இவருடைய நெருங்கிய நண்பர். ஒரு நாள் நிஷாந்த் ரூசோவின் வேலைக்காரன் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். அதன்பின் நிஷாந்த், அவர் மனைவி பாடினியும் காணாமல் போகிறார்கள். கொலைக்கான பின்னணியை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நட்டி நட்ராஜ் வருகிறார்.
இவர் காணாமல் போன நிஷாந்த், பாடினியை கண்டுபிடிக்க தேடுகிறார். அப்படி இருக்கும்போது ஒரு நாள் நிஷாந்த் மட்டும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் திரும்பி வருகிறார். இறுதியில் நிஷாந்த் ரூசோவின் மனைவி என்ன ஆனார்? வேலைக்காரரை கொலை செய்தது யார்? நிஷாந்த் மனநிலை பாதிக்கப்பட காரணம் என்ன? இது எல்லாம் நட்டி கண்டுபிடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் ஹீரோவாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இவர் நடித்திருக்கும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. இவர் அடுத்து கதாநாயகியாக அவரும் பாடினியின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. இவர்களை அடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் இன்ஸ்பெக்டராக நட்டி நட்ராஜ் நடித்திருக்கிறார். படம் முழுவதுமே இவர் தோளில் சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். கொலையாளிகளை தேடுவது, சம்பந்தப்பட்டவர்களை விசாரிப்பது போன்றவற்றில் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இயக்குனர் இந்த படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஒரு கொலையில் இருந்து தொடங்கும் இந்த கதை ஆன்லைன் சூதாட்டம், காதல் என ஒவ்வொரு கட்டத்துக்கு நகர்ந்து சென்றிருக்கிறது. கொலையாளி யார்? என்பதை கடைசி வரை இயக்குனர் சஸ்பென்ஸாக காண்பித்திருப்பது தான் படத்திற்கு பலத்தை கொடுத்திருக்கிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைகள் இருந்தாலும் படம் பார்ப்பதற்கு சுமாராக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.
நிறை:
நட்டி நடராஜ், நிஷாந்த் நடிப்பு அருமை
கதைக்களம் ஓகே
பின்னணி இசை ஓகே
கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது.
சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
பாடல்கள் பெரிதாக கவரவில்லை
கதைக்களம் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கிறோம்.
மொத்தத்தில் சீசா – முயற்சி.