மகனின் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று தற்போது அங்கேயே விவசாயியாக மாறி இருக்கும் நெப்போலியன் – அவரே வெளியிட்ட வீடியோ.

0
426
nepolean
- Advertisement -

அமெரிக்கவில் செட்டில் ஆன நடிகர் நெப்போலியன் அங்கே விவசாயம் செய்து வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. இவர் திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. பிறகு போராடி 1991ல் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

-விளம்பரம்-
நடிகர் நெப்போலியன் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே ! -  Tamil Behind Talkies

அதன் பின்னர் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கிறது. இவர் இதுவரை கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.

இதையும் பாருங்க : ‘என் இதயத்துடிப்பு நீ’ – சமீபத்தில் பிறந்த தன் மகனின் முகத்தை முதன் முறையாக காட்டிய காஜல் – ப்பா, என்னா Cuteuuu.

- Advertisement -

அமெரிக்காவில் செட்டில் ஆன நெப்போலியன் :

சில காலம் நெப்போலியன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.அதோடு இவரது குடும்பம் தற்போது அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர். இவரின் மூத்த மகன் தனுஷுக்காக தான் இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளனர்.

இரண்டு ஹாலிவுட் படங்கள் :

அதற்கு முக்கிய காரணமே , அங்கு தனுஷிற்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் நெப்போலியன் அவர்கள் ஹாலிவூட் படத்தில் நடித்து உள்ளார். அந்த ஹாலிவுட் படத்தின் பெயர் கிறித்துமஸ் கூப்பன். டேனியல் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் கோர்ட்னி டேனியல் ஷீனா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்துள்ளார். நெப்போலியனுக்கு இது இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அமெரிக்காவில் விவசாயம் :

அமெரிக்காவில் செட்டில் ஆன நெப்போலியன் இறுதியாக ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘அன்பறிவு’ படத்தில் நடித்து இருந்தார். பின்னர் மீண்டும் அமெரிக்கா சென்றுவிட்டார். இப்படி ஒரு நிலையில் அங்கு தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து இருக்கும் நெப்போலியன் தன்னுடைய விவசாய நிலத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு எம் ஜி ஆரின் ‘விவசாயி’ பாடலை பாடி, தான் ஒரு அமெரிக்க விவசாயி என்று கூறியுள்ளார்.

நடிகர் நெப்போலியன் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே ! -  Tamil Behind Talkies

நெப்போலியன் அளித்த பேட்டி :

ஏற்கனவே பேட்டி ஒன்றில் தான் அமெரிக்கவில் செட்டில் ஆன காரணம் குறித்து பேசிய நெப்போலியன் ‘ தாயின் அரவணைப்பும், தந்தையின் வழிகாட்டுதலும் இருந்தால் ஒரு குழந்தை நல்வழியில் செல்லும். நான் என்னுடைய இரண்டு மகன்களும் 3 , 5 வயது என்று சிறுவயதாக இருக்கும்போது ஓடி ஓடி உழைத்துக் கொண்டு இருந்தேன்.எல்லா பெற்றோர்களும் பிள்ளைகளின் டீன் ஏஜ் வயதில் சரியான முறையில் வழிநடத்த வேண்டும். அதுவும் என்னை மாதிரி சூழ்நிலை உள்ள பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பாத்து கொள்ள வேண்டும். அதனால் தான் நான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன்’ என்று கூறியிருந்தார்.

Advertisement