தமிழ் சினிமாவில் ரஜினி, காலம் வரை தற்போதுள்ள நடிகர்கள் வரை அனைவருக்கும் பரிட்சயமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது நெப்போலியன் அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்று தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால், அவரது மகன் தனுஷுக்கு ஏற்பட்டுள்ள சோகத்தை பற்றி

Advertisement

தனுஷூக்கு மூன்று வயசாகி நடக்க ஆரம்பிச்சப்போ, திடீர், திடீரென கிழே விழ ஆரம்பிச்சிருக்கான். என்னவோ ஏதோனு பதறி துடிச்சு, டாக்டர்கிட்ட போய் காட்டினாங்க. தனுஷை தாக்கியிருப்பது மஸ்குலர் டிஸ்ட்ரபி-ங்ற மரபியல் நோய்னு தெரிய வந்தப்போ, ரெண்டு பேரும் நிலைஞ்சு போயிட்டாங்க. மூன்றரை வயசிலேர்ந்து சென்னையில் சிகிச்சை ஆரம்பிச்சு பிசியோ தெரபி முதல் எல்லா தெரபிகளும் கொடுத்தாங்க.

கடும் சிரமத்திற்கு மத்தியில் தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு நலமாக உள்ள தனுஷூக்கு இப்போ வயசு 17. அமெரிக்காவில் படிக்கிறார். தன்னோட வேலைகளை தானே பார்த்துக்கிற அளவுக்கு முன்னேறிட்டார். கட்டு வைத்திய முறை மூலமா, மருந்தே இல்லாத இந்த கொடிய நோயிலிருந்து தனுஷூக்கு மறுவாழ்வு கிடைச்சிருக்கு. இதனால் கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்து தனுஷ் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நெப்போலியன். தனது மகனை கவனித்து கொள்வதால் சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ளாராம் நெப்போலியன்.

Advertisement
Advertisement