சட்டரீதியாக பிரச்சனையை சந்திக்க உள்ளேன், பெண் ஒருவர் தன் மீது சுமத்தப்பட்ட புகார் குறித்து நிவின் பாலி விளக்கம்

0
61
- Advertisement -

தன் மீது சுமத்தப்பட்ட புகாருக்கு, நடிகர் நிவின் பாலி கொடுத்திருக்கும் விளக்கம் தான் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.

-விளம்பரம்-

பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி, ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

ஹேமா கமிட்டி அறிக்கை:

இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், அம்மா அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் விளக்கம் கொடுத்தார். தற்போது, பல நடிகைகள் முன்வந்து திரைத்துறையில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து, பிரபல இயக்குனர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் மீது புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிவின் பாலி மீது புகார்:

அவ்வகையில் பிரபல நடிகர் நிவின் பாலி மீது கொடுக்கப்பட்டப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடிகர் நவீன் பாலி மீது பாலியல் வழக்கு ஒன்று கொடுக்கப்பட்டது. அதாவது வெளிநாட்டில் சந்தித்தபோது, சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மலையாளத் திரைப்பட நடிகர் நவீன் பாலி மீது காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்திருந்தனர்.

-விளம்பரம்-

நிவின் பாலி விளக்கம்:

பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கேரளாவின் எர்ணாகுளத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலில் குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி தொடர்ந்து வருவதால் மலையாள திரை உலகில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நடிகர் நவீன் பாலி தன்மீது சுமத்தப்பட்ட புகார் குறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார்.

நிவின் பாலி பதிவு:

அந்தப் பதிவில் அவர், ஒரு பெண்ணுக்கு நான் பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்து கொண்டிருக்கும் பொய் செய்தியை பார்த்தேன். இது முழுக்க முழுக்க பொய்யான புகார். என் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டு ஆதாரம் அற்றது என நிரூபிக்க நான் எந்த எல்லைக்குப் போக வேண்டுமானாலும் தயாராக உள்ளேன். விரைவில், உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி. மற்றவை சட்டரீதியாக கையாளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement