தமிழில் ரஜினி கமல் காலகட்டம் தொடங்கி விஜய், அஜித் காலம் வரை காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகர் ஓமக்குச்சி. 90ஸ் காலகட்டம் முதல் தற்போது உள்ள இளைய ரசிகர்கள் வரை இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். 1979ஆம் ஆண்டு மாந்தோப்பு கிளியே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின்னர் ரஜினி கமல் போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். இவரது முக்கிய அடையாளமே இவரது உருவ அமைப்பு தான், மிகவும் ஒல்லியாக ஓமக்குச்சி போல் இருந்ததால் இவருக்கு ஓமக்குச்சி என்ற பெயர் வந்தது. ஆனால், இவரது இயற்பெயர் நரசிம்மன். தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர், இறுதியாக 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்க : விஜய் 63 யில் வில்லனாக நடிக்கும் ஷாருக்கான்.! சம்பளம் எவ்வளவு தெரியுமா.!
நடிகர் ஓமக்குச்சி கடந்த 2009ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். ஓமக்குச்சிக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கிறார் மேலும் மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார். ஆனால், இதுவரை அவர்களை யாரும் பார்த்தது இல்லை.
இந்த நிலையில் ஓமகுச்சியின் மகன் காமேஷ்வரா தற்போது சாமியாராக மாறிவிட்டாராம். சாய் பாபா, சித்தர்கள், இயேசுவை நேரில் சந்தித்திருக்கிறேன் என்று கூறியுள்ள அவர், அதன் பிறகு ஆன்மீகத்தை நானே நம்பத் தொடங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் காமேஷ்வரா சுவாமி வசித்து வருகிறார்