இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று பல துறைகளில் சாதித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் பாக்கியராஜ். இவர் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான படைப்புகளை கொடுத்திருக்கிறார். இவருடைய தனித்துவமான கதையும் இயல்பான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது. இவரை திரைக்கதை மன்னன் என்று பலரும் அழைத்தார்கள்.

மேலும், சில தினங்களுக்கு முன் பாக்கியராஜ் வாக்கிங் சென்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்திருந்தார். இவரை குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் இறந்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதோடு பாக்யராஜின் மறைவுக்கு முதல்வர் விஜய் அரசு மரியாதை அறிவித்து இருந்தார். அதோடு தன்னுடைய குருவின் இழப்பை தாங்க முடியாமல் பார்த்திபன் கதறி கதறி அழுதார். கடைசி வரை பாக்யராஜ் குடும்பத்திற்கு ஆறுதலாக பார்த்திபன் நின்றார்.
பார்த்திபன் பதிவு:
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் போட்ட எமோஷனல் பதிவில், கடைசி வரை யாரோ? பாடிய கண்ணதாசனுக்கே காடு வரை தானே? பாரதிராஜா சாருக்கும் அப்படித்தான் மதுரை காட்டுராடு வரை சென்றேன் -அதுவே விளிம்பு. அதற்கு பின் மண்ணுக்குள் அவர் மட்டும் சென்று விட்டார். இன்று என் குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட்நகர் மின் தகனம் வரை. எழுதுதட்டை அதில் சில வெண்காகிதங்கள் அதில் ‘அன்புடன் உங்கள் பாக்யராஜ்’ கொட்டை எழுத்துக்களில் அவர் இதயப் பகுதியில் நான் வைத்தது ‘கடைசிவரை’ சென்றது. கால்மாட்டில் தீபம், நெஞ்சில் கற்பூரம் ஏற்றிய பின் அந்தத் தீக்குகை நோக்கிப் பயணம் ஆயுத்தமானது. ஒரு சக முயற்சியாளராக அறிமுகமான பாக்யராஜை குருவாக ஏற்றுக்கொண்டபின், அடிபணிந்தே பணிப்புரிந்தேன்.
பாக்யராஜ் பற்றி சொன்னது:
தூக்கத்தை பட்டிளி போட்டே பழக்கப்பட்டவனாதலால் சூரியனுடனே கிளம்பி ஆபிஸுக்கு சென்று விடுவேன். பாக்யராஜ் சாரின் அறையை சுத்தப்படுத்தி அவர் அமரும் இடத்தில் Pad paper pen -ஐ தயார் நிலையில் வைப்பேன். இப்போதும் அந்த P P P அவரது இதயத்திற்குப் பக்கத்தில் வைத்திருக்கிறேன். அது நகர்ந்து அந்த தீப்பிழம்புக்குள் அஸ்தி பெற காத்திருக்கும் சாந்தனு பக்கத்தில் ஆறுதல் சொல்ல வந்தமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் திரு கண்ணன் ரவியிடம் “ அப்போது நீங்கள் செய்தது (ராவணக்கோட்டம் தயாரித்தது)பத்தாது, இப்போது சாந்தனுவை வைத்து படம் எடுங்கள்” என்றேன். அந்த இடத்தில் அதைப் பேசுவது சரியா தவறா என்ற யோசனையை மீறி. பாக்யராஜ் சாருக்கு நன்றி கடனாக சாந்தனுவை வைத்து ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ எடுத்தவன் நான்.

உருக்கமான பதிவு:
மீண்டும் சாந்தனு வெற்றி பெற வேண்டுகிறேன். திறமையை மீறி வெற்றி மட்டுமே இங்கு கொண்டாடப்படும் ! பூத உடல் சாம்பலானாலும் புகழுடல் நிலைக்கப் போகும் பாக்யராஜ் சார் கடைசியாக யோசித்த படத்தின் பெயர் ‘ மயான கொள்ளை’ என அவரது இன்றைய உதவியாளர் கூறினார். What an irony? (Irony is a contrast between expectation and reality. It occurs when the literal meaning of words or the outcome of an event is the exact opposite of what is naturally expected, creating a surprising, humorous, or sometimes tragic effect.) Google வழி சொல்லாத இடத்திற்கு சென்று விட்ட குருவின் அஸ்தியை பெஸன்ட் நகர் கடலில் கரைத்துவிட்டு நினைவை மட்டும் சுமந்தபடி என்று கூறி இருக்கிறார்.






