கோவை தனியார் கிராபிக்ஸ் நிறுவனம் மீது நடிகர் பார்த்திபன் கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலம் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் எப்போதும் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் சினிமா துறையில் இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.

இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'டீன்ஸ்'. இந்த படத்தை பயாஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருகிறார் இயக்குனர்.
பார்த்திபன் படம்:
கடந்த மாதம் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. இந்த படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் போலீசில் நடிகர் பார்த்திபன் கொடுத்திருக்கும் புகர் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கோவை தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் சிவபிரசாத். இவர் இந்த படத்திற்காக விஎப்எக்ஸ் காட்சிகளை உருவாக்கி தருவதற்கு 68.5 லட்சம் பேசப்பட்டு இருந்தது.

பார்த்திபன் புகார்:
இதற்கான முன் பணமாக 42 லட்சம் ரூபாயை பார்த்திபன் கொடுத்திருக்கிறார். ஏப்ரல் மாதமே முடித்து கொடுப்பதாக சிவபிரசாத் கூறியிருந்தார். ஆனால், சிவபிரசாத் முடித்து தராமல் தாமதம் செய்திருக்கிறார். இதனால் பார்த்திபனும் பணத்தை தராமல் இருந்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் 88.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மெயில் மூலம் சிவபிரசாத் கூறியிருக்கிறார்.
போலீஸ் விசாரணை:
இதை பார்த்து கடுப்பான நடிகர் பார்த்திபன் போலீசில் கிராபிக்ஸ் நிறுவனர் சிவபிரசாத் மீது புகார் கொடுத்திருக்கிறார். இதை அடுத்து போலீசாரும் நம்பிக்கை மோசம், ஏமாற்றுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தற்போது இந்த சம்பவம்தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இவர் இயக்கி நடித்த “ஒத்த செருப்பு" படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பார்த்திபன் திரைப்பயணம்:
இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு பல விருதுகள் கூட குவிந்தது. இதனை தொடர்ந்து இவர் 'இரவின் நிழல்' என்ற சிங்கிள் ஷாட் படத்தை எடுத்தார். இந்த படத்திலும் இவரது முயற்சிக்கு பெருத்த வரவேற்பு கிடைத்து இருந்தது. இந்த படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை அடுத்து பார்த்திபன் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.






