ஐஸ்சுடன் நைஸ் போஸ் – பார்த்திபன் Selfieயை மீம் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள் – அவர் சும்மா இருப்பாரா ?

0
199
- Advertisement -

இங்கு நல்ல மீம்ஸ்கள் விற்கப்படும் என்று கலாய்த்து பார்த்திபன் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி இருக்கிறார். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க பலர் முயற்சித்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்தினம் சாதித்து காட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் டீசர்,ட்ரைலர் எல்லாம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. அதோடு படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

மேலும், சில வாரங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் படத்தை விளம்பரம் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர், நகைகள் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடை, ஆபரணங்கள் அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தங்களுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ரசிகர் கேட்ட கேள்வி:

அந்த வகையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் படபிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமார் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ஐஸ்வர்யா ராயை கவிதை வடிவில் பாராட்டியிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், எனக்கு ஒரு சின்ன ஹாய் சொல்லுங்க என்று கேட்டிருக்கிறார். இதை பார்த்த பார்த்திபன் அவர்கள் அந்த ரசிகருக்கு சின்ன ஹாய் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அந்த மீம்ஸ் புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

பார்த்திபன் பதிவிட்ட பதிவு:

அதில் அவர், மீன்ல விரால் நல்லது, மீம்ஸ் வைரல் ஆவது நல்லது! (எடிட்டர் ஹரீஷ் அனுப்பியதால் வந்த தத்துவமிது) இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்! என்று பதிவிட்டு இருக்கிறார். இப்படி பார்த்திபன் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் பார்த்திபன்- ஐஸ்வர்யா ராய் இருக்கும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை வைரல் ஆக்கி வருகின்றனர்.

Advertisement