அஜித் என்னை வா போனு தான் கூப்பிட சொன்னார்..!ஆனால், விஜய் அப்படி இல்லை..!பிரபல நடிகர் பேட்டி..!

0
162
Ajith-vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் தான் இந்த தலைமுறையின் சூப்பர் ஸ்டார்களாக கருத்தப்படக்கூடியவர்கள். பொதுவாக எந்த பிரபலத்திடம் நேர்காணல் கண்டாலும் இவர்கள் இருவரை பற்றிய கேள்விகளை முன் வைக்காமல் இருக்க மாட்டார்கள் அந்த வகையில் நடிகர் பவன் பேட்டி ஒன்றில் விஜய் மற்றும் அஜித் குறித்து பேசியுள்ளார்.

அஜித் நடிப்பில் வெளிவந்த “ராசி” படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகர் பவன், தமிழில் “கலாபக் காதலன்” படத்தில் தனா,”பொல்லாதவன்” படத்தில் அவுட்டு எனத் தனது 20 வருட சினிமா பயணத்தில் பெயர் சொல்லும்படியான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது “வடசென்னை” படத்தில் வேலு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு தொலைபேசி மூலமாக பேட்டியளித்த ஜனா விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு, விஜய் யார்கிட்டேயும் பேச மாட்டார், ரொம்ப அமைதியான ஆள்னு சொல்லுவாங்க. அவர் அப்படிப்பட்ட ஆளெல்லாம் கிடையாது. செம ஜாலியா பேசுவார். “குருவி” படத்தில் நான் அவரோட நடிச்சப்போ, ‘பொல்லாதவன்’ படத்தில் நல்லா பண்ணியிருந்தீங்க. அந்த அழற சீன்ல செம’னு சொன்னார்.

Pawan

அதே போல “ராசி” படத்தில் இருந்தே அஜித் எனக்கு நல்ல பழக்கம். “ஜி” படத்திலும் அவரோடு சேர்ந்து நடிச்சேன். நான் அஜித்தை வாங்க, போங்கனு சொன்னா, உனக்கும் எனக்கும் ஒரே வயசுதான் வா,போனு கூப்பிடுனு சொல்லுவார். நிறைய அட்வைஸ் பண்ணியிருக்கார். நீயே போய் எனக்கு வில்லன் ரோல் வேணும்னு கேட்காத. டைரக்டர் பார்த்துட்டு அவரே உனக்கு எது செட்டாகும்னு பார்த்து நடிக்க வைப்பார்னு சொல்லுவார். ரொம்ப அக்கறை எடுத்து பேசக்கூடிய ஆள்.

Advertisement