ஒரே ஒரே மெசேஜ் தான் பண்ணேன் 45 லட்சம் செலவு பண்ணி என் ஆப்ரேஷனை முடிச்சிட்டார் – தெலுங்கு சூப்பர் ஸ்டார் செய்த உதவி குறித்து பொன்னம்பலம்.

0
1273
ponnambalam
- Advertisement -

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரபல நடிகரான பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் இருந்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் சிறுநீரக செயலிழப்பு எப்படி நடந்தது என்பதை பற்றி அதிர்ச்சியூட்டும் விஷியத்தை சமீபத்தில் உடகாத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார்.

-விளம்பரம்-

பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் வில்லன் நடிகராக நடித்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம் .

- Advertisement -

சிறுநீரகம் செயலிழப்பு ;

இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவிசெய்து இருந்தார். மேலும், பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வந்தார். அதோடு இவருக்கு அவரது அக்கா மகனே ஒரு சிறுநீரகத்தை கொடுத்து தற்போது நல்லபடியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்த அவர் சில அதிர்ச்சியூட்டும் விஷியங்களை கூறினார்

தள்ளிப்போன நண்பர்கள் :

அவர் பேசுகையில் “தான் மருத்துவ சிகிச்சைக்கு முன்னர் நோய் காரணமாக, பல முறை தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். மேலும் போதிய ஆதரவும், மருத்துவ பராமரிப்பும் இல்லாத ஒருவரின் வாழ்கை எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதனை அப்போது தான் பொன்னமலம் அறிந்து கொண்டாரார். மேலும் தன்னுடன் பல வருடங்களாக இருந்த நண்பர்கள் அந்த இக்கட்டான சமயத்தில் ஒருவர் கூட உதவி செய்யவில்லயாம்.

-விளம்பரம்-

உதவிக்கரம் நீட்டிய நடிகர்கள் :

ஆனால் அதிர்ஷ்டவசமாக சிரஞ்சீவி, அர்ஜுன், விஜய் சேதுபதி, சரத்குமார், தனுஷ், கமல்ஹாசன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி வழங்க முன்வந்தனர். தன்னுடைய அந்த இக்கட்டான காலத்தில் தனக்கு உதவி செய்த அவர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் சாகவேண்டும் எண்ணம் தனக்கு இருந்தாலும் அவர்கள் காட்டிய ஆதரவும் அன்பும் தனக்கு நம்பிக்கை கொடுத்து அந்த நோயில் இருந்து போராடுவதற்கான மனா உறுதியை கொடுத்ததாம்.

ஒரே போனில் 45 லட்சம் :

மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு தன்னுடைய நிலைமையை சொல்லி ஒரு மெசேஜ் அனுப்பி பின்னர் ஒரு முறை போனில் பேசிய பிறகு 45 லட்சம் கொடுத்தார், தான் அதனை நினைத்து கூட பார்க்கவில்லை என்று தெரிவித்தார். அதோடு நடிகர் தனுஷ்ஷுக்கு ஒரே ஒரு போன் தான் அடிச்சேன். தொலைபேசியில் பேசும்போது வாங்கி கணக்கில் பணத்தை போட்டதாகவும் பொன்னம்பலம் நெகிழ்ந்து தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ரசிகர்கள் 20, 10 ,100, 1000 ரூபாய்கள் என தான் உதவி கேட்டதும் பெயரே தெரியாதவர்கள் உதவி செய்தனர். அவர்களை நான் என்றென்றும் மறக்க மாட்டேன் என்று கூறினார்.

ஏமாற்றிய விஜய், அஜித், விக்ரம் :

அதோடு தனக்கு உதவியே செய்யா மாட்டார்கள் என நினைத்தவர்கள் கூட உதவி செய்த நிலையில் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ள விஜய் , அஜித், விக்ரம் போன்றவர்கள் தன்னுடைய நிலைமையை அறிந்தும் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் நடிகர் அஜித்தை தன்னுடைய கூட பிறந்த தம்பியை போன்று நினைத்தாகவும் ஆனால் அவர் ஒரு போன் கூட செய்யவில்லை என்று வருந்தினார். அதேபோன்று விஜய்யின் தொடக்க படங்களில் அவருடன் நடித்த எனக்கு என்ன ஆனது என்று கூட விசாரிக்கவில்லை என்று வருத்தப்பட்டார்.

Advertisement