தன்னுடைய உடல்நலம் பற்றி நடிகர் பொன்னம்பலம் வெளியிட்டு இருக்கும் ஆடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். இவர் தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் சண்டை பயிற்சியாளர் ஆனார். பிறகு இவர் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தார். பின் இவர் சிறந்த வில்லன் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இவர் இயக்குனர், நகைச்சுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் பொன்னம்பலம் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் வில்லன் நடித்து இருந்தார் நடிகர் பொன்னம்பலம் . இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில வருடமாக இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். குறிப்பாக, நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன், சிரஞ்சீவி என பலர் உதவிசெய்து இருந்தார்கள். அதற்கு பின் குணமடைந்து பொன்னம்பலம் வீடு திரும்பினார்.
பொன்னம்பலம் குறித்த தகவல்:
அதை அடுத்து இவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் பொன்னம்பலம் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து எனக்கு உடல்நிலை முடியாமல் போய்விட்டது. அப்பல்லோ மருத்துவமனையில் கிட்டத்தட்ட 40 நாள் அட்மிட் ஆகியிருந்தேன். அதற்கு பிறகு தான் வீடு திரும்பினேன். இப்போது மீண்டும் ஐந்து, ஆறு நாட்களாக அட்மிட் ஆகியிருக்கிறேன்.

பொன்னம்பலம் பதிவு:
உடல் முழுக்க இன்பெக்சன் ஆகிவிட்டது. ஏற்கனவே மிகப்பெரிய போராட்டத்தில் இருந்து தான் மீண்டு வந்தேன். இதற்கு மூல காரணமே டாக்டர் சுப்பாராவ்தான். அவர்தான் என்னை காப்பாற்றினார். அவரை நான் கடவுளாக பார்க்கிறேன். இதுவரைக்கும் ஐசியூவில் தான் இருந்தேன். எமர்ஜென்சியில் தான் அட்மிட் ஆனேன். இப்ப நார்மல் வார்டுக்கு வந்திருக்கிறேன். குணமாக இன்னும் இரண்டரை மாதம் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆப்ரேஷன் முடிந்து விட்டது. ஆசனவாய் அருகே அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். இப்போதைக்கு வேலைக்கு எதுவும் போக முடியாது.
https://www.youtube.com/watch?v=1OkiTPlrz4Q
உதவியவர்களுக்கு நன்றி:
சிரஞ்சீவி சார், சரத்குமார் சார், தனுஷ், கே.எஸ் ரவிக்குமார், நிழல்கள் ரவி, ரவி மோகன், சிம்பு, கமல் சார் என்று பலருமே எனக்கு ரொம்ப உறுதுணையாக உதவி செய்தார்கள். நண்பர்களும் நடிகர்களுமே நிறைய உதவி செய்திருக்கிறார்கள். எனக்கு இந்த உயிரை பிச்சை கொடுத்ததற்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன். இப்போ பொருளாதாரத்தில் நான் நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். என்னையே என்னால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கடந்த ஐந்து வருடமாக வேலைக்கு எதுவும் போகவில்லை.
https://www.youtube.com/watch?v=fV4RuBwBX-g
உடல்நிலை பற்றி சொன்னது:
அதில் முழுசாக 90 சதவீதம் மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகி எப்படியோ இருந்த வாழ்க்கை இப்படி மாறிவிட்டது. பொருளாதாரப் பிரச்சனையில் ரொம்பவே அடிபட்டு தரைமட்டத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு இப்படி ஆகிவிட்டது என்று ஒரு குறையாக வெளிப்படுத்த வேண்டாம். நான் கொடுத்து வைத்த பணத்தை யாரிடமும் நான் கேட்கவில்லை. அன்பு மட்டும் கொடுத்திருக்கிறேன். அதே அன்பு எனக்கு இரட்டிப்பாக கிடைத்திருக்கிறது. நான் விரைவில் குணமடைந்து திரும்பி வர ஆண்டவனை வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.






