Home பொழுதுபோக்கு சமீபத்திய

தம்பியா நினைத்தேன், அவர் எனக்கு பணம் குடுக்கலான கூட பராவாயில்ல, ஆனா – அஜித் குறித்து பொன்னம்பலம் வருத்தம்.

0
449
ponnambalam
-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்து நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் பொன்னம்பலம். முதலில் இவர் சண்டை பயிற்சியாளராக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஒரு இரு காட்சிகளில் நடித்தார். பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தார். பின்னர் இயக்குனர் ,ஹீரோ, நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர் பொன்னம்பலம். மேலும், தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் வில்லன் நடித்து இருக்கிறார் .

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது சிகிச்சைக்கு பல நடிகர்கள் உதவி செய்து இருக்கிறார்கள். அதோடு இவருக்கு அவரது அக்கா மகனே ஒரு சிறுநீரகத்தை கொடுத்து தற்போது பொன்னம்பலம் நல்லபடியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பொன்னம்பலம் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் இப்போது நன்றாக இருக்கிறேன்.

ஒரு படம் எடுத்து அதனால் நான் நிறைய நஷ்டம் அடைந்தேன். அதனால் தான் நான் பண நெருக்கடியை சந்தித்தேன். சினிமா உலகில் இருந்து கொண்டு சினிமாவைப் பற்றி புரிந்து கொள்ள எனக்கு ரொம்ப நாளானது. என் வாழ்க்கை முழுக்கவும் உழைக்கிறது சம்பாதிக்கிறது, சொந்தபந்தங்களுக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்கிறது, அவர்களை படிக்க வைப்பது என்று போய்விட்டது. நீ வாழ்க்கையில் ரொம்ப ஆடிட்ட, உனக்கு ஒரு தண்டனை கொடுக்கிறேன். அந்த தண்டனையில் நீ திருத்திக்கோ என்று தான் ஆண்டவன் எனக்கு இந்த பிரச்சனையை கொடுத்தார்.

-விளம்பரம்-

சாகும் நிலையில் இருக்கும்போது நல்லா பழகினவர்கள் எல்லாம் போன் பண்ணி நலம் விசாரிக்கவில்லை என்பது மனவேதனை அளித்தது. அதேபோல் அஜித் பத்தி சொல்லும் போது பலரும் என் மேல கோபப்பட்டார்கள். என் டிரைவரும் நண்பருமான அப்துல் ரசாக்கிற்கு நான் கேட்டதும் அஜித் சார் உதவி செய்து இருந்தார். பலரும் அவரிடம் நான் பண உதவி கேட்டதாக சொன்னார்கள். அவர் என்னை நலம் விசாரிக்கணும் தான் எதிர்பார்த்தேனே தவிர அவரிடமிருந்து பணம் எல்லாம் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை விசாரிக்காதது அவருடைய சூழலாக கூட இருக்கலாம்.

-விளம்பரம்-

அதை நான் குறை சொல்லவில்லை. என் ஆதங்கத்தை தான் நான் பகிர்ந்தேன். அதே மாதிரி குடித்ததால் தான் எனக்கு இப்படி ஆனது என்றெல்லாம் மீடியாவில் செய்திகளை பரப்பிக் கொண்டிருந்தார்கள். அதுவும் நான் செட்டிலையே உட்கார்ந்து குடிப்பேன் என்றெல்லாம் பேசி இருந்தார்கள். நான் தொழிலில் சுத்தமாக இருந்ததால் தான் நான் இந்த நிலைமையில் இருக்கும் போது ஒருவர் 50 லட்சம் ரூபாய் செலவு பண்ணி என் கிட்னியை சரி பன்னார். நான் செட்டில் இந்த மாதிரி நடந்து கொண்டால் எனக்கு உதவி பண்ணுவார்களா? நான் சம்பாதித்ததில் 75% வீட்டுக்கு தான் செலவு பண்ணினேன். ஆண்டவன் புது வாழ்க்கையை எனக்கு இப்போது கொடுத்திருக்கிறார்.

என் நண்பர்கள் என் உடன்படித்தவர்கள் இடம் தான் நான் முதலில் உதவி கேட்டேன். ஆனால், அவர்கள் யாரும் எனக்கு உதவி பண்ண வில்லை. என்னுடன் நடித்த நடிகர்கள் தான் உதவி பண்ணினார்கள். சரத்குமார் சார் கூட நடிக்கும் போதெல்லாம் எனக்கும் அவருக்கும் பல நேரங்களில் மோதல் இருந்தது. ஆனால், அவர் அதை பற்றி எல்லாம் யோசிக்காமல் எனக்கு உதவி செய்து தற்போது வரை என் உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார். அர்ஜுன், ஜெயம் ரவி, கே எஸ் ரவிக்குமார் என பல பேர் எனக்கு உதவி செய்து இருக்கிறார்கள். அதேபோல் திடீரென்று ஒரு நாள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட போனேன். அங்கு தான் எனக்கு சிரஞ்சீவி ஞாபகம் வந்தது. அவரிடம் உதவி கேட்கலாம் என்று ஒரு போன் தான் பண்ணினேன். கடவுள் ரூபத்தில் ஆஞ்சநேயரே நேரடியாக வந்து உதவுற மாதிரி இதுவரைக்கும் 50 லட்சத்திற்கும் மேல் எனக்கு செலவு செய்திருக்கிறார்.

அவர்தான் என்னுடைய மருத்துவ செலவை கவனித்துக் கொள்கிறார். கடவுள் மனிதன் ரூபத்தில் வந்து உதவுவார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். அப்படி தான் நான் அவரை பார்க்கிறேன். விஜயகாந்த்தும் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். என்னை சினிமாவில் உயர்த்தியது அவர்தான். சினிமாவில் என் குரு என்றால் அவரை தான் நான் சொல்லுவேன். எனக்காக ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பிரச்சினையை தீர்த்து வைத்து உதவி இருக்கிறார்கள். தனுஷ் சார் தான் மூணு வருஷமாக என்னுடைய குடும்ப செலவை கவனிக்கிறார். இத்தனை பேர் எனக்காக இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கும்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news