பிரபுவின் மகனை தெரியும், அவரின் மகளை பார்த்துளீர்களா ? ஹீரோயின் ரேஞ்ல இருக்காரே.

0
1630
prabu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகமாக என்றென்றும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர் சிவாஜி கணேசன். இவருடைய மகன் தான் பிரபு. இவரை அனைவரும் இளைய தான் என்று தான் அழைப்பார்கள். இவரும் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருந்தார். இவர் 1982ம் சிவாஜி கணேசனின் சங்கிலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், பிரபு அவர்கள் தன்னுடைய தந்தை சிவாஜி கணேசன் அளவுக்கு சினிமா உலகில் பெயரும், புகழும் வாங்கவில்லை என்றாலும் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று உள்ளார். மேலும், இவர் ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து இருந்த மறைக்காயர் என்ற படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் பிரபு:

இதனை தொடர்ந்து இவர் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடமாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது.

பிரபு நடிக்கும் படங்கள்:

இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் பிரபு மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்திற்காக பிரபு தன்னுடைய உடல் எடையை குறைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகர் பிரபு அவர்கள் புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு என்ற மகன் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

பிரபு மகன்-மகள் பற்றிய தகவல்:

விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். விக்ரம் பிரபு 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப் படத்தின் வாயிலாக திரை உலகில் பிரபலமானர். தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். மேலும், பிரபுவிற்கு மகன் இருப்பது தெரியும். ஆனால், அவருக்கு ஒரு மகள் இருப்பது பலரும் தெரியாத ஒன்று. நடிகர் பிரபுவின் மகள் பெயர் ஐஸ்வர்யா. இவர் பிகாம் டிகிரியை(B.Com) எத்திராஜ் கல்லூரியில் படித்து உள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, குணால் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. நடிகர் பிரபுவின் தங்கை தேன்மொழி மகன் தான் குணால்.

பிரபு மகளின் புகைப்படம்:

குணால் அவர்கள் யூகேவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய திருமணம் சென்னையில் உள்ள சிவாஜியின் வீட்டில் சிறப்பாக நடை பெற்றது. இந்த விழாவிற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல் ஹாசன், அஜித், ஷாலினி, ஜோதிகா என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது இருக்கும் ஐஸ்வர்யா உடைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும், பிரபுவின் மகளா! என்று வாயடைத்து போய் விட்டார்கள். அந்த அளவிற்கு அவர் செம க்யூட்டாக சின்ன தம்பி குஷ்பு போல் இருக்கிறார் என்று ரசிகர்கள் எல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement