ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளில் சத்யராஜ் மற்றும் பிரபு வீட்டில் நேர்ந்த இழப்பு.

0
717
prabu
- Advertisement -

இளைய திலகம் பிரபுவின் மாமியார் காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு திரையுலகினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகமாக என்றென்றும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர் சிவாஜி கணேசன். இவருடைய மகன் தான் பிரபு. இவரை அனைவரும் இளைய திலகம் என்று தான் அழைப்பார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக பிரபு திகழ்ந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளிவந்து இருந்த மரைக்காயர் என்ற படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் பிரபுவின் மனைவி புனிதா. இவர்களுக்கு விக்ரம் பிரபு என்ற மகன் இருக்கிறார். விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் பிரபுவின் மனைவி புனிதாவின் தாயார் இன்று காலமாகி இருக்கிறார். புனிதாவின் தாயார் திருமதி கோபாலகிருஷ்ணன். இவர் தஞ்சை அருகே உள்ள அம்மாபேட்டை என்ற பகுதியில் வாழ்ந்து வந்தார். இவர் உடல்நிலை குறைவு காரணமாக காலமாகி இருக்கிறார். மேலும், இவருடைய இறுதிச் சடங்கு இன்று நடைபெற இருக்கிறது.

இதனை அடுத்து பிரபு குடும்பத்தினருக்கும், பிரபுவிற்கும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் இரங்கலை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சத்தியராஜின் சகோதரி கல்பனாவும் இன்று தான் காலமாகி இருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது. சத்யராஜ் மற்றும் பிரபு இருவரும் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள் சின்னத்தம்பி பெரியதம்பி திரைப்படத்தில் இருவரும் அண்ணன் தம்பிகளாக நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement