சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்தும், தற்கொலை செய்தும் இருக்கிறார்கள். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. ஆனால், இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் தான் நடித்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=diOEYosgAuU
இது குறித்து சோசியல் மீடியாவிலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனை அடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம் பயங்கரமாக வைரலாகி இருந்தது. பின் பல கட்ட அழுத்தங்களுக்கு பிறகு தமிழ்நாடு ஆளுநர் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஒப்புதல் வழங்கியிருந்தார்.
தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பணம் அல்லது பிற பங்குகளை வைத்து ஆன்லைன் சூதாட்டம்/ஆன்லைன் கேம்களில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் தண்டனை வழங்கப்படும் என்று உத்தரவு போடப்பட்டு இருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டம்:
இந்த சூழ்நிலையில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களில் நடித்ததற்காக பிரபலங்கள் மீது ஹைதராபாத் காவல் துறை அலுவலகத்தில் தொழிலதிபர் பி.எம்.பனீந்திர சர்மா என்பவர் தான் புகார் கொடுத்து இருகிறார். இவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் பிரகாஷ்ராஜ், ராணா ரகுபதி, விஜய் தேவர் கொண்ட என 20 பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=doCtITUG1vQ
போலீஸ் வழக்குப்பதிவு:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்து பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், நான் 9 வருடங்களுக்கு முன்பு 2016 இல் ஒரு வருடம் ஆன்லைன் கேம் விளம்பரம் ஒன்றில் ஒப்பந்தம் போட்டு நடித்தேன். ஆனால், சில மாதங்களிலேயே அது தவறு என்று உணர்ந்துவிட்டேன். இந்த விளையாட்டு சட்டபூர்வமாக இருக்கலாம். ஆனால், என் மனசாட்சிக்கு அது சரி இல்லை என்று தோன்றியது. பின் ஒரு வருடம் கழித்து 2017ல் அந்த விளம்பரத்தில் நடிக்க மீண்டும் கேட்டார்கள்.
பிரகாஷ்ராஜ் விளக்கம்:
நான் மறுத்துவிட்டேன். அதன் பிறகு நான் அந்த மாதிரியான விளம்பரங்களில் நடிக்கவே இல்லை. 2021ல் அந்த நிறுவனம் அந்த விளம்பரத்தை மீண்டும் பயன்படுத்தியிருந்தார்கள். உடனே நான், அந்த விளம்பரத்திற்காக அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸும் அனுப்பிவிட்டேன். அப்போதிலிருந்து நான் எந்த விளம்பரமும் செய்யவில்லை. இளைஞர்களே கேமிங் செயலிகளை பயன்படுத்தாதீர்கள். உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள்.
My response 🙏🏿🙏🏿🙏🏿 #SayNoToBettingAps #justasking pic.twitter.com/TErKkUb6ls
— Prakash Raj (@prakashraaj) March 20, 2025
சூதாட்ட விளம்பரம் பற்றி சொன்னது:
அதேபோல் நான் காவல் நிலையத்தில் இருந்து எந்த ஒரு நோட்டீசையும் வாங்கவில்லை. எந்த சம்மனும் வரவில்லை. அது வரும்போது நான் சொல்லுவேன். ஆனால், நான் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்து தெளிவுபடுத்துவது என்னுடைய பொறுப்பு என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். தற்போது பிரகாஷ் ராஜின் இந்த பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.





