பிராமணர் குடும்பம், அக்ரகாரம்,சொந்த வீடு, ஓமகுச்சியின் உறவினர் – பிரசன்னாவை பற்றி பல விஷயத்தை சொன்ன ஊர் ஊர் மக்கள்.

0
1875
prasanna
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை எத்தனையோ பிரபலங்கள் உறவினர்களாக இருந்து வந்தாலும் ஒரு சில பிரபலங்கள் உறவினர்கள் என்பதை கேட்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அந்த வகையில் நடிகர் பிரசன்னா மறைந்த நடிகர் ஓமக்குச்சியின் உறவினர் என்ற தகவல் நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த பல நடிகர்களுக்கு பல ஆண்டுகள் கழித்து தான் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. அந்த வரிசையில் நடிகர் பிரசன்னாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார் பிரசன்னா.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் எண்ணெற்ற படங்களில் நடித்தாலும் இவரது சிறந்த நடிப்பிற்கு ஒரு சிறந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும், பிரசன்னாவை ‘அஞ்சாதே’ படத்தில் மூலம் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டி அவரது திரை வாழ்க்கையை மாற்றினார் மிஸ்கின். கரூர் மாவட்டம் பொய்மணி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் பிராமினர் ஐயர் குடும்பத்தை சேர்ந்தவர். பிரசன்னா உடைய தாத்தா பள்ளி ஆசிரியர். அதே போல இவரது தந்தை BHEL நிறுவனத்தில் பணியாற்றியவராம்.

- Advertisement -

பிரசன்னாவின் சொந்த ஊர் :

பிரசன்னா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் மொத்த குடும்பமும் சென்னைக்கு சென்று விட்டது. பிறகு பொய்மணியில் உள்ள அவர்களுடைய சொந்த வீட்டையும் விற்று விட்டு சென்னைக்கு சென்று விட்டார்கள். நடிகரான பின்னர் ஒருமுறை மட்டும் தான் பிரசன்னா அவருடைய சொந்த ஊருக்கு வந்து இருக்கிறாராம். அதற்கு பிறகு அவர் வருவதே இல்லையாம். ஊர் மக்கள் எல்லோரும் பிரசன்னா வந்து சென்றால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ள ஊர் மக்கள். நடிகர் பிரசன்னா, நடிகர் ஓமக்குச்சியின் உறவினர் என்று கூறி இருகின்றனர்.

நடிகர் ஓமக்குச்சி :

தமிழில் ரஜினி கமல் காலகட்டம் தொடங்கி விஜய், அஜித் காலம் வரை காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகர் ஓமக்குச்சி. 90ஸ் காலகட்டம் முதல் தற்போது உள்ள இளைய ரசிகர்கள் வரை இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். 1979ஆம் ஆண்டு மாந்தோப்பு கிளியே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினி, கமல், விஜய் என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

ஓமக்குச்சி மகன் :

இவரது இயற்பெயர் நரசிம்மன். தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர், இறுதியாக 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தில் நடித்திருந்தார்.நடிகர் ஓமக்குச்சி கடந்த 2009ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். ஓமக்குச்சிக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கிறார் மேலும் மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார். ஆனால், இதுவரை அவர்களை யாரும் பார்த்தது இல்லை.

மகுச்சியின் மகன் காமேஷ்வரா தற்போது சாமியாராக மாறிவிட்டாராம். சாய் பாபா, சித்தர்கள், இயேசுவை நேரில் சந்தித்திருக்கிறேன் என்று கூறியுள்ள அவர், அதன் பிறகு ஆன்மீகத்தை நானே நம்பத் தொடங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் காமேஷ்வரா சுவாமி வசித்து வருகிறார். ஆனால், இவர் பிரசன்னாவின் உறவினர் என்பது தற்போது தான் தெரியவந்துள்ளது.

Advertisement