13,528 ரூபாய் மின் கட்டண நிலுவையை செலுத்தச் சொன்ன மின் வாரியம் – பிரசன்னா கொடுத்த பதில்.

0
3867
prasanna
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக நடிகர் பிரசன்னா Vs தமிழ் நாடு மின்வாரியதிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் ஒரு புறம் சற்று வைரலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள். இந்நிலையில் கோடைகாலம் காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-

அதோடு கொரோனாவால் ஒட்டுமொத்த திரையுலகமும் மூடப்பட்டது உள்ளது. வீட்டுக்குள் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு சமூகவலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் பிரசன்னா அவர்கள் மின்சார வாரியம் குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், இந்த கொரோனா லாக்டவுனில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இதை உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்? எனப் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

இதை பார்த்த பலரும் பதில் அளித்துவந்தனர். மேலும், தங்களுக்கும் இம்மாதம் அதிக மின் கட்டணம் வந்ததாக கூறிவந்தனர். இந்த நிலையில் பிரசன்னாவின் குற்றசாட்டிற்கு மின்சார துறை பதில் அளித்ததோடு பிரசன்னாவிற்கு கண்டமும் தெரிவித்துள்ளது. மேலும், நடிகர் பிரசன்னா, மார்ச் மாதத்தர்கான ரூ. 13,528 மின்கட்டணத்தை நடிகர் பிரசன்னா செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.

தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் பிரசன்னா, உண்மைதான் ரீடிங் எடுத்ததில் இருந்து 10 நாட்களுக்குள் பொதுவாக கட்டணம் செலுத்தும் பழக்கமுள்ள நான். மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் கட்டணம் செலுத்த தவறியது உண்மைதான். அதே அளவு இதற்குமுன் காலதாமதமின்றி தவறாமல் கட்டணம் செலுத்தி வருகிறேன் என்பதும் உண்மை. வாரியம் சொல்வதுபோல் நான்கு மாதம் கணக்கிட்டாலும் மார்ச் மாத கட்டணம் சேர்த்தும் எனக்கு தனிப்பட்ட கட்டணம் கூடுதலாக வந்திருக்கலாம். என் தனிப்பட்ட பிரச்சினையாக இதை நான் எழுப்பவில்லை அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர் நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவே என் டிவிட்.

-விளம்பரம்-

மின் வாரியத்தை குறை சொல்வதோ குற்றம் சாட்டுவது என் நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும் வந்திருப்பதாக சொல்லப்படும் அதிக கட்டணம் குறித்து கவன ஈர்ப்பும் அதன் மூலம் வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில் ஏதாவது முறையில் இப்பிரச்சனையில் மக்களுக்கு ஒரு கட்டணம் செலுத்த தவணை அல்லது கால அவகாசமும் தருமாயின் மிக்க உதவியாக இருக்கும் என்பதே என் வேண்டுகோள். தொலைக்காட்சிகளிலும் அதையே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஊரடங்கு காலங்களில் மருத்துவ சுகாதார துறையில் போலவே மின் வாரிய ஊழியர்களும் அதிகாரிகளும் அயராது பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை நன்றியோடு நான் மறக்கவில்லை.

மற்றபடி வாரியத்தை அரசு கூறுவதற்கான உள்நோக்கம் இல்லை. உள்நோக்கம் இல்லாத போதும் என் வார்த்தை மின்வாரிய ஊழியர்கள் அதிகாரிகள் மனம் நோகச் செய்திருப்பின் அதற்காக வருந்துகிறேன் மக்கள் மீது விழுந்திருக்கும் இந்த எதிர்பாரா சுமையை வாரியமும் அரசும் இறக்கி வைக்கும் என எதிர்பார்க்கிறேன் என் வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும் எந்த நிறுவனம் என்று இன்று காலை நான் சிரித்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்

Advertisement