தன்னைவிட சிறிய ஹீரோ படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ள பிரசாந்த்..!ரசிகர்கள் ஷாக்..!

0
548
Prasanth

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக விளங்கி வந்தார். விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகர் பிரசாந்த், தொடர் தோல்வி படங்களால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமலே போனார்.

PrasanthinRamcharanmovie

நடிகர் பிரஷாந்திற்கு சினிமாவில் மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது அவரது திருமண வாழ்க்கை தான். நடிகர் பிரசாந்த்திற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்கிற பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.திருமண வாழ்கை தோல்வி அடைந்ததால், நடிகர் பிரஷாத் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார்.அதன் பின்னர் பிரசாந்த் நடித்த எந்த படமும் வெற்றியடையவில்லை.

Prasanthandramcharan

இந்நிலையில் தெலுங்கில் ராம் சரன் நடிக்கும் ’வினய விதேய ராமா’வில் செகண்ட் ஹீரோ போல ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியானது அதில் ஒரு சில நொடிகள் மட்டுமே நடிகர் பிரசாந்த்,ராம்சரனுக்கு பின்னால் நடந்து வருவது போல காட்சிகள் இருக்கிறது. இதை கண்ட பிரசாந்த் ரசிகர்கள், மாஸ் ஹீரோவாக வலம் வரவேண்டியவரை இப்படி ஜூனியர் ஆர்டிஸ்ட் போல பயன்படுத்தி உள்ளார்களே என்று புலம்பி வருகின்றனர்.