நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் பரபரப்பு புகார் – பின்னணி இது தான்.

0
426
prasanth
- Advertisement -

நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் ஒருவர் அளித்திருக்கும் பண மோசடி புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். இவர் பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-
Prasanth

அதன் பின் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றியை பெற்று இருந்தது. மேலும், 90 காலகட்டத்தில் விஜய், அஜித்தை விட இவருக்கு ஏகப்பட்ட மவுஸ் இருந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான். அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்து இருக்கிறது. பின் இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியது.

- Advertisement -

பிரசாந்த் திரைப்பயணம்:

இதனால் பிரசாந்த் இடம் தெரியாமல் குறைய போனார். இடையில் அப்பப்போ தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து இருந்தார். அதோடு நடிகர் பிரசாந்த் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று இருந்தார். இவருடைய திருமண வாழ்கை தோல்வி அடைந்ததால் நடிகர் பிரஷாத் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பின் இவர் ‘சாகசம்’ படம் மூலம் மீண்டும் சினிமா உலகில் ரீ எண்ட்ரி கொடுத்து இருந்தார்.

பிரசாந்த் நடிக்கும் படம்:

ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது இவர் அந்தகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜா இயக்க இருக்கிறார். இவர் பிற மொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வதில் கைதேர்ந்தவர். அப்படி அவர் தமிழில் ரீமேக் செய்து இயக்கிய பல படங்கள் வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

இலங்கை பெண் கொடுத்த புகார்:

மேலும், இந்த படம் வெளியான அடுத்த மாதமே பிரசாத்துக்கு இரண்டாம் திருமணம் நடைபெற இருப்பதாக அவரின் தந்தை தியாகராஜனே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் ஒருவர் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, இலங்கையை சேர்ந்த பெண் குமுதினி. இவர் சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

பிரசாந்த் கொடுத்த புகார்:

மேலும், நடிகர் பிரசாந்த் இவரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் ஒன்றை குமுதினி அளித்திருக்கிறார். இதனை அடுத்து பிரசாந்த் தரப்பில் இருந்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் இதெல்லாம் பொய் புகார் என்று அந்த பெண் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். இப்படி இரு தரப்பினரும் புகார் அளித்து இருப்பதை அடுத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement