லண்டனில் கற்ற கலை கைவிடல. வித்யாசமான கதை, சூப்பர் இயக்குனர். அதிரடி என்ட்ரி கொடுக்கப்போகும் பிரசாந்த்.

0
60521
- Advertisement -

பாலிவுட்டில் கடந்த ஆண்டு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ‘அந்தாதுன்’. இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கினார். பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படம் ஆகும். இந்த திரைப்படம் இந்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையம், வசூலையும் பெற்றது. ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாக தான் இந்த படம் உருவானது. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கூட இந்த படத்திற்கு சார்பாக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை என மூன்று தேசிய விருதுகளையும் வென்றது. குறிப்பாக இந்த படம் சீனாவில் ஹாலிவுட் படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்குத் தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Image result for director raja mohan prasanth

- Advertisement -

பிரம்மாண்ட அளவில் வெற்றி அடைந்த இந்தப் படத்தை இதர மொழிகள் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருக்கின்றனர். அந்த வகையில் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து உள்ளார்கள். அந்தாதுன்’ படம் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது ஆகும். தமிழில் ரீமேக்கில் இந்த படத்தில் முதலில் சித்தார்த் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. பின் நடிகர் தனுஷ் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிகர் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் தமிழ் உரிமையை அவரது தந்தை தியாகராஜன் பெற்று உள்ளார். அதுவும் ஆயுஷ்மன் குரானா வேடத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர்.

பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரியில் நல்ல கைதேர்ந்த பியானோ கலைஞர் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்க சரியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இப்படத்தை தமிழில் பிரபலமான இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் விஜய்யை வைத்து வேலாயுதம், சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் இவர் பிற மொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வதில் கைதேர்ந்தவர். அவ்வாறு இவர் ரீமேக் செய்து இயக்கிய பல படங்கள் வெற்றி பெற்று உள்ளன. இதன் காரணமாக தான் பாலிவுட்டில் வெற்றி பெற்ற இந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்கினால் சரியாக இருக்கும் என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

தற்போது இந்த படத்தின் இயக்குநர், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது .இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ‘ஜானி கத்தார்’ படத்தின் ரீமேக்கையும் தமிழில் ‘ஜானி’ என்ற பெயரில் தியாகராஜன் தான் தயாரித்தார். அதிலும் பிரசாந்த் நாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement