பல வருடம் சினிமாவில் தலை காட்டாத பிரசாந்த்.! மனைவியால் நடந்த சோகம்.!

0
1307
Prasanth

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக விளங்கி வந்தார். விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகர் பிரசாந்த், தொடர் தோல்வி படங்களால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமலே போனார்.

actor prasanth

நடிகர் பிரஷாந்திற்கு சினிமாவில் மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது அவரது திருமண வாழ்க்கை தான். நடிகர் பிரசாந்த்திற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்கிற பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

திருமனாகி சில ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்து வந்த நடிகர் பிரஷாந்த், ஆனால், நடிகர் பிரஷாந்த்தை விட கிரகலட்சுமி வயது அதிகமானவர் என்பதும், இவரை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டதும் பின்னர் தெரிய வந்துள்ளது. மேலும், கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூட சில சர்ச்சை எழுந்தது.

Grahalakshmi

கிரகலட்சுமி பற்றி தெரிய வந்ததும் இவர்கள் இருவருக்குள்ளும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு அது விவாகரத்து வரை சென்றது. இதனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.திருமண வாழ்கை தோல்வி அடைந்ததால், நடிகர் பிரஷாத் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

Actor-Prashanth-

ஒருவழியாக இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் பிரஷாந்த். ஆனால், திருமணத்திற்கு பின்னர் நடிகர் பிரசாந்தால் ஒரு ஹிட் படத்தை கூட கொடுக்கமுடியவில்லை. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது வெற்றி செல்வன் என்பவறின் இயக்கத்தில் ‘ஜானி ‘ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.