பிரபல நடிகர் பிரசாந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை சிம்ரன் குறித்து கூறியிருக்கும் விஷயங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டு இருந்தவர் பிரசாந்த். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பிரசாந்துக்கு இடையில் சினிமா மார்க்கெட் குறைய தொடங்கியவுடன் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்திருந்தார்.

இதனால் பிரசாந்த் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போனார். இடையில் ஒரு சில துணை கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அவர் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், மனோபாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பிரசாந்த்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார்.
அந்தகன் படம்:
இந்த படம் ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும். மேலும், இந்த படம் வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இந்தப் படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் பிரசாந்த் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சிம்ரன் மற்றும் நடிகர் விஜய் குறித்து பிரசாந்த் பேசியுள்ளார்.

சிம்ரன் குறித்து:
அதில், நடிகை சிம்ரனுக்கு ஜோடியாக ஏழாவது முறையாக அந்தகன் படத்தில் நடித்துள்ளேன். படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் கலாய்த்துக் கொள்வோம். எங்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருக்கிறது. ஒருபுறம், நடிகர்களாக எங்களின் நடிப்பை எப்படி மேம்படுத்துவது என்பதை குறித்து பேசிக் கொள்வோம். மறுபக்கம், நாங்கள் இருவரும் நண்பர்களாக பல விஷயங்களை பேசிக் கொள்வோம். சிம்ரன் எப்போதுமே எனக்கு லக்கி சார்ம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச படம் எல்லாமே ஹிட் தான் என்று கூறியுள்ளார்.
விஜய் குறித்து:
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் 'கோட்' படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பிரசாந்த். அதில், சமீபத்தில் தான் கோட் படத்தின் முதல் பாடல் 'விசில் போடு' வெளியானது. அந்தப் பாடலுக்கு நல்லா வரவேற்பும் கிடைத்திருந்தது. இதுக்கு எல்லாத்துக்குமே காரணம் இயக்குனர் வெங்கட் பிரபு தான். அவர்தான் நீங்க மூணு பேருமே ஒரே பிரேமில் வந்து டான்ஸ் ஆடுவிங்க. அதைப் பார்த்து மக்கள் கொண்டாடுவாங்க என்று சொன்னார். அவர் சொன்ன மாதிரியே மேஜிக் செய்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

விஜய்யும் நானும் நல்ல நண்பர்கள்:
நானும் விஜய்யும் ஒரே சமயத்தில் தான் நடிப்பதற்கு வந்தோம். ஆனால், நீ பெருசா நான் பெருசா என என்னைக்குமே நாங்க நினைத்தது கிடையாது. கோட் படம் நடிப்பதற்கு முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணி பல விஷயங்களை ஷேர் பண்ணிக்கிட்டோம். எங்களுக்குள்ள ஒரு நல்ல பாண்டிங் இருக்கு. விஜய் ஒரு நல்ல மனிதர். உண்மையான அன்பை எப்போதும் வெளிப்படுத்துவார். என் மீது எப்போதும் அக்கறையோடு இருப்பார். அதேபோல், அவருக்காக நான் இருக்கிறேன் என்று பேட்டியில் பிரசாந்த் பகிர்ந்துள்ளார்.






