கோட் படத்தில் நடிகர் பிரசாந்த் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ பட படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் என்பது அனைவரும் தெரிந்தே. கடைசியாக லியோ படத்திற்கு இவர் 120 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். ஆனால், இந்த கோட் படத்தில் அப்படியே பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்.
விஜய் சம்பளம்:
கோட் படத்தில் விஜய் சம்பளம் மட்டுமே 200 கோடி. இது குறித்து கூட சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜயை நம்பி 400 கோடி பணம் முதலீடு செய்தாலும் அதில் லாபம் பார்க்க முடியும் என்று கூறியிருந்தார். இதை அடுத்து பலரும் மற்ற நடிகர்களின் சம்பளம் குறித்த கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோட் படத்திற்காக நடிகர் பிரசாந்த் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரசாந்த் சம்பளம்:
அதாவது, ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். விஜயை விட இவரின் படங்கள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இடையில் சில பிரச்சனைகளால் இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த அந்தகன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கோட் படம்:
அந்த வகையில் இவர் விஜயின் விஜயுடன் கோட் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக பிரசாந்த்துக்கு ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை. தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

படம் குறித்த தகவல்:
நீண்ட இடைவெளிக்கு பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதுவரை இந்த கோட் படத்தில் இருந்து 4 பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த முறை இசை வெளியீட்டு விழா இல்லை.






