இறுதிச்சடங்கில் நிறைவேறிய பிரதாப் போத்தனின் கடைசி ஆசை – உயிரோடு இருக்கும் போது குடும்பத்தரிடம் அவர் சொன்ன விஷயம்.

0
1317
pratap
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குநரகராவும் திகழ்ந்த பிரதாப் போத்தன் நேற்று காலமான சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரதாப் போத்தன், பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல படங்களில் நடித்த பிரதாப், வெற்றிவிழா, மைடியர் மார்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட 12 படங்கள் இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

70 வயதான பிரதாப் போத்தன் நேற்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே பிரதாப் போத்தன் மிக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு கூட தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்க்கை குறித்தும் மரணம் குறித்தும் விரக்தியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் ஜார்ஜ் கார்களின்  வரிகளை குறிப்பிட்டு “மரணம் நாம் தினமும் எச்சில் விழுங்குவதால் ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘சோழர்கள் வம்சத்தில் அது பழக்கமே இல்ல’ வரலாற்று உண்மைகளை மறைத்தாரா இயக்குனர் ? – மணிரத்னம், மற்றும் விக்ரமுக்கு நோட்டீஸ்.

இறுதியாக பதிவிட்ட முகநூல் பதிவு :

அவர் கடைசியாக பதிவிட்ட அந்த பேஸ்புக் பதிவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக டிரன்டாகி வருகிறது. இந்தநிலையில், திரைப்பட நடிகரும், தயாரிப்பாளர்ரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் மறைவு இயற்கையாக நடந்ததா? அல்லது தற்கொலையா ? என சந்தேகங்கள் எழுந்தது. இன்னிலையில் பிரதாப் போத்தன் நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டார் என முதல் கட்ட அறிக்கையை வெளியிட்டனர்.

-விளம்பரம்-

போலீசார் விளக்கம் :

அதில் நேற்று 15.07.2022 ஆம் தேதி காலை சுமார் 8.00 மணியளவில் சமையல்காரர் மேத்யூ என்பவர் காபி கொடுக்க பிரதாப் போத்தன் படுக்கை அறைக்கு சென்றபோது பிரதாப் போத்தன் சுயநினைவின்றி மெத்தையில் படுத்த நிலையில் இருந்துள்ளார். உடனே பிரதாப் போத்தனின் கார் டிரைவர் சுரேஷ் என்பவருக்கு செய்தியை தெரிவித்துள்ளார். பின்பு இருவரும் சேர்ந்து அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அனுப்பியுள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில் பிரதாப் போத்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து சென்றுள்ளனர்.

பிரதாப்பின் இறுதி சடங்கு :

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பிரதாப் போத்தன் நேற்று காலை அவரது இல்லத்தில் இறந்தார்.கமல்ஹாசன், கார்த்தி, பிரபு, ராம்குமார், மணிரத்னம், சீனுராமசாமி, பிசிஸ்ரீராம், சத்யராஜ், ரேவதி, பூர்ணிமா பாக்யராஜ், ராஜிவ் மேனன், கனிகா, மனோபாலா, கருணாஸ், வெற்றிமாறன், சின்னி ஜெயந்த், ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பிரதாப் போத்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

நிறைவேறிய கடைசி ஆசை :

பிரதாப் போத்தனின் உடல் இன்று காலை சென்னை, கீழ்பாக்கத்தில் இருந்து அருகில் உள்ள வேலங்காடு மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்த பின் பிரதாப் போத்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது. கிறிஸ்துவ முறைப்படி உடல் அடக்கம் செய்யப்படுவது தான் வழக்கம். ஆனால், தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என பிரதாப் போத்தன் முன்னரே அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்ததால் அவரது விருப்பப்படியே உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisement