மகனின் விலையுயர்ந்த கார்.! வசதியான ரோடு.! கேரள வெள்ளத்தில் நடந்த சோகம்.!

0
950
- Advertisement -

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. தொடர்ந்து பொழிந்து வரும் கன மழையின் வெள்ள பெருக்காலும், மண் சரிவாலும் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.ஆயிரன கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பல்வேறு நடிகர், நடிகர்களும் அடக்கம்.

-விளம்பரம்-

prithvi-lamborgini-mallika.

- Advertisement -

இதில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிரிதிவிராஜின் வீடு மழை வெள்ளம் சூழ்ந்து முற்றிலும் மூழ்கியது. அங்கிருந்த சிலர் பிரிதிவிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டனர். இதில் நடிகர் ப்ரித்விராஜின் தாய் மல்லிகாவை ஒரு ஆண்டாவில் வைத்து இழுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் ப்ரிதிவிராஜின் தாய் மல்லிகா பல கோடி மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு கார் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த காரை ஓட்டிச் செல்கிற அளவுக்கு கேரள மாநிலத்தின் சாலைகளின் தரம் சரியில்லை, சாலைகளை சீரமையுங்கள் என்று கேரள பொது பணித்துறை அமைச்சருக்கு மனு ஒன்றை கொடுத்திருந்தார். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் விவாதத்திற்கு உள்ளாகியது.

-விளம்பரம்-

Kerala-floods-Prithviraj

ஆனால், தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையால் நடிகர் ப்ரிதிவிராஜின் வீடு மழை வெள்ளத்தால் மூழ்கிய போது நடிகர் ப்ரிதிவிராஜின் தாய் மல்லிகாவை ஒரு சமையல் செய்யும் பெரிய அண்டாவில் அமர வைத்து அழைத்து வந்தனர். விலை உயர்ந்த காரை ஓட்டி செல்ல சாலை கேட்ட நபரை இன்று இயற்கை அண்டாவில் பயணம் செய்ய வைத்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement