தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் தம்பி ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகர் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பெரும்பாலும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

அந்த வகையில் கடைசியாக இவர் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த கோட் படத்தில் ஒரு நடிப்பில் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து இவர் சில படங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் பிரேம்ஜி நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் பேச்சுலர் ஆக சுற்றிக் கொண்டிருந்தார்.
கடந்த ஆண்டு தான் பிரேம்ஜிக்கு திருமணம் நடந்தது. இவர் இந்து என்ற பெண்ணைத்தான் திருமணம் செய்தார்.
பிரேம்ஜி குறித்த தகவல்:
இந்து சேலத்தைச் சேர்ந்தவர். இவர்களுடைய திருமணம் முருகன் கோவிலில் நடந்த நிலையில் முக்கிய பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர். இது முழுக்க முழுக்க காதல் திருமணம். இவர்கள் இருவருக்கும் சுமார் 20 வயது வித்தியாசம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருமணம் குறித்து விமர்சனங்கள் வந்தாலும் பிரேம்ஜியும், இந்துவும் தங்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். பிரேம்ஜி தனது மனைவியுடன் இணைந்து சமையல் செய்வது, ஊர் சுற்றுவது என என்ஜாய் செய்து வருகிறார்.
View this post on Instagram
பிரேம்ஜி திருமணம்:
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ‘பிரேம்ஜி மாமியார் மசாலா’ என்னும் மசாலா தொழிலை இந்துவின் தாய் செய்து வருகிறார். மேலும், சமீபத்தில் தான் பிரேம்ஜி அப்பா ஆகி இருக்கும் செய்தி காட்டுத்தீயாய் பரவி இருந்தது. பின் பிரேம்ஜி மிக எளிமையாக தன்னுடைய மனைவி இந்துவின் வளைகாப்பை நடத்திருந்தார். பின் இது தொடர்பான புகைப்படம் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
View this post on Instagram
பிரேம்ஜி குழந்தை:
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பிரேம்ஜியின் மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் பிரேம்ஜி- இந்து தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது இந்த தகவல் வெளிவந்தது தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






