கேம் ஓவர், தி எண்ட் – முரட்டு சிங்கள் பிரேம்ஜி பகிர்ந்த திருமண வீடியோ.

0
45150
premji

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன். சிம்பு இயக்கி, நடித்த ‘வல்லவன்’ படத்தில் பிரேம்ஜி அமரன் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘சென்னை 28’ படத்தில் முழு நீள காமெடி ரோலில் பிரேம்ஜி நடித்திருந்தார். ‘சென்னை 28’ படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சென்னை 28’ படத்துக்கு பிறகு “சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா” என அடுத்தடுத்து பல படங்களில் பிரேம்ஜி அமரன் நடித்தார்.

View this post on Instagram

Game over the end ?

A post shared by Premgi (@premgi) on

மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததை விட, வெங்கட் பிரபு இயக்கிய “சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 – 2” போன்ற படங்களில் பிரேம்ஜி அமரனுக்கு அதிக ஸ்கோப் இருக்கும். காமெடியனாக மட்டுமே வலம் வந்த பிரேம்ஜி அமரன், 2015-ம் ஆண்டு வெளியான ‘மாங்கா’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்த படத்தை இயக்குநர் ஆர்.எஸ்.ராஜா இயக்கியிருந்தார்.

இதையும் பாருங்க : ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்டு திருநங்கைகள் போராட்டம். காரணம் என்ன தெரியுமா?

- Advertisement -

ஒரு நடிகராக மட்டுமின்றி பிரேம்ஜி அமரன் “துணிச்சல், நெஞ்சத்தைக் கிள்ளாதே, தோழா, அதே நேரம் அதே இடம், என்னமோ நடக்குது, அச்சமின்றி, ஜாம்பி” போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது, சிங்கிளாக இருக்கும் பிரேம்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். பிரேம்ஜி நடித்த ‘தோழா’ படத்தில், இவருக்கு திருமணம் ஆவது போல் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்

View this post on Instagram

Happy 2020 Be Happy ?

A post shared by Premgi (@premgi) on

அக்காட்சியின் வீடியோவை ஷேரிட்டதோடு, “கேம் ஓவர் தி எண்ட்” என்று ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் “எப்போ ப்ரோ உங்களுக்கு மேரேஜ்.. கன்ஃபார்ம் ஆயிடுச்சா?” என்று ஸ்டேட்டஸ் போட்ட வண்ணமுள்ளனர். இந்த ‘தோழா’ படத்தை என்.சுந்தரேஸ்வரன் இயக்கியிருந்தார். இதில் பிரேம்ஜியுடன் இணைந்து நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய் ராஜ், சாகித்யா, ஜெனிஃபர், லக்ஷனா, சௌமியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

இப்போது, நடிகராக பிரேம்ஜி அமரன் கைவசம் “டக்கர், ராங்கி, மாநாடு” ஆகிய படங்கள் உள்ளது. இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கும் ‘மாநாடு’ படத்தை வெங்கட் பிரபு இயக்கி கொண்டிருக்கிறார். மேலும், ஹீரோவாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கி கொண்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார் பிரேம்ஜி அமரன்.

இந்த படத்தில் ‘பிக் பாஸ்’ புகழ் ரேஷ்மா, ஸ்வயம் சித்தா என டபுள் ஹீரோயின்ஸ் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக பிரேம்ஜி அமரன் கைவசம் ‘பார்ட்டி’ மற்றும் ‘கசட தபற’ என இரண்டு படங்கள் இருக்கிறது. இதில் ‘பார்ட்டி’ படத்தை வெங்கட் பிரபுவும், ‘கசட தபற’ படத்தை சிம்பு தேவனும் இயக்கியுள்ளனர்.

Advertisement