அந்த யானை அண்ணாச்சி பழத்தை சாப்பிட்டதால் இரக்கல, அது நேத்தும் இறக்கல – ஷாக்கிங் தகவலை சொன்ன பிரித்திவிராஜ்.

0
28470
- Advertisement -

கேரள மாநிலத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த கோர சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் பெண் யானை ஒன்று பசியை போக்கிக் கொள்ள மலப்புரம் பகுதிக்கு வந்தது. அப்போது அங்கிருந்த இரக்கமற்ற மனிதர் ஒருவர் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை கொடுத்து உள்ளார். அதை சாப்பிட்ட யானையின் வாய் புண்ணாகியது. அதன் பிறகு உண்ண முடியாமல் பசியால் துடிதுடித்துள்ளது. ஆற்று நீரில் இறங்கிய அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பின் அந்த யானையை பிரேத பரிசோதனை செய்தார்கள். அப்போது அந்த யானையின் வயிற்றில் ஒரு குட்டி இருந்தது தெரிய வந்தது.

-விளம்பரம்-
Image

அந்த யானை இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை பெற்று எடுக்கும் நிலையில் இருந்தது. கர்ப்பமாக இருந்த யானையை கொடூரமாக கொல்லப்படுள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின் அப்பகுதியிலேயே அந்த யானைக்கு அதிகாரிகள் இறுதி மரியாதை செய்து எரியூட்டியுள்ளனர். இதை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது இது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வந்தது.

- Advertisement -

மேலும், #RIPHumanity #KeralaElephant #JusticeForKeralaElepnat போன்ற பல்வேறு ஹேஷ் டேக்குகள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் வந்தது. மேலும், பல்வேறு சினிமா பிரபலங்கள் யானைக்கு அண்ணாச்சி பழத்தில் வெடி வைத்து கொடுத்த கவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தனர். அதே போல படிப்பறிவில் முன்னணயில் இருக்கும் மாநிலத்தில் மனிதாபிமானம் இல்லை என்றெல்லாம் பலரும் விமர்சித்தினர்.

இந்த நிலையில் கேரளாவை குறை சொல்லும் நபர்களுக்கு நடிகர் பிரிதிவிராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அதில், கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு வேண்டுமென்றே யாரும் அண்ணாச்சி பழத்தில் வெடிமருந்தை வைத்து கொடுக்க வில்லை. அந்த யானை தவறுதலாக பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளுக்கு வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை சாப்பிட்டு விட்டது.

-விளம்பரம்-

இது சட்ட விரோதமானது தான். ஆனால், பல்வேறு பகுதிகளில் விவசாய நிலத்தையும் பயிர்களையும் நாசம் செய்யும் காட்டு விலங்குகளை விரட்ட இதுபோன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்றதே தவிர மல்லப்புரத்தில் கிடையாது. காவல் துறையும், வனத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் உடனடியாக வந்து அந்த யானையை காப்பாற்ற நினைத்தார்கள். ஆனால், அது முடியவில்லை.மேலும், அந்த யானை மே 27-ஆம் தேதி இருந்ததே தவிர நேற்று கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளார்.

Advertisement