அனைத்து சொத்துக்களையும் விற்று பரிதாபமாக உயிரிழந்த பழம் பெரும் பிரபல நடிகரின் மகன்..!

0
3904
- Advertisement -

இருந்தால் ராஜா இல்லை என்றால் கூஜா, இந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ கண்டிப்பாக சினிமா தயாரிப்பாளர்களுக்கு பொருந்து. அந்த வகையில் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளரான பி எஸ் வி ஹரிஹரனின் வாழ்க்கை மிகவும் சோகமாக முடிந்துள்ளது.

-விளம்பரம்-

Psv

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் பரிட்சியமான வில்லன் நடிகர்களில் ஒருவரான பி எஸ் வீரப்பாவின் மகன் தான் இந்த ஹரிஹரன்.மறைந்த நடிகர் பி எஸ் வீரப்பா பி எஸ் வி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருக்கு பின்னர் அவரது மகன் ஹரிஹரன் அந்த நிறுவனத்தை பார்த்து வந்தார். தயரிப்பாளரான இவர் தமிழில் ‘சாட்சி’, ‘நட்பு’ போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

ஆனால், ஹரிஹரன் தயாரித்த படத்தால் அவருக்கு மிகுந்த பண நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் மொத்த சொத்தையும் இழந்துள்ளார். அவர் கடும் வறுமையில் சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரின் வறுமை பற்றி அறிந்து பிரபல தயாரிப்பாளர் தாணு 1 லட்ச ருபாய் உதவி செய்திருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீழே விழந்து அவருக்கு பின் மண்டையில் அடி ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாகமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிஹரன் கடந்த புதன் கிழமை (அக்டோபர் 21)அன்று உயிரிழந்தார்.

Advertisement