என்னா மனுஷன்யா, கேஜிஎப் 1 வெளியான போது வாழ்த்து தெரிவித்த புனீத், தற்போது வைரலாகும் throwback வீடியோ – சோகத்தில் ரசிகர்கள்

0
398
puneeth
- Advertisement -

கே ஜி எப் 1 படம் வெளிவந்த போது புனீத் பேசி இருந்த வீடியோவை தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். சமீப காலமாகவே இந்தியாவில் பேன் இந்தியா என்று சொல்லும் இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதிலும் தென்னிந்திய படங்கள் முன்னிலையில் உள்ளனர். அப்படி சமீபத்தில் வெளிவந்த பாகுபலி, புஸ்பா,RRR போன்ற படங்கள் எல்லாம் வெற்றி அடைந்துள்ளது. இந்த வரிசையில் தற்போது கேஜிஎப் 2 படமும் இணைந்துள்ளது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான படம் தான் கேஜிஎப். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான்.

-விளம்பரம்-

இந்த படம் தான் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியாகியுள்ளது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை தொடங்குகிறார் யாஷ் .

- Advertisement -

கே ஜி எஃப் 2 கதை:

ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. பின் கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று எதிரிகள் பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

கேஜிஎப் 2 படம் பற்றிய தகவல்:

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மாசாக இருக்கிறது. கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். இதுவரை கே ஜி எஃப் 2 படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்தப் படம் மொத்தமே 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தை முந்தி வெற்றி அடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

கன்னட சினிமா குறித்த தகவல்:

தற்போது பேன் இந்தியா ஸ்டாராக யாஷ் ஜொலித்து கொண்டிருக்கிறார்.இந்த படம் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் கூடிய விரைவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமே. தற்போது கன்னட சினிமாவை கேஜிஎப் முன்பு மற்றும் பின்பு என இரண்டாக பிரிக்கும் அளவுக்கு கே ஜி எஃப் படம் மாற்றியுள்ளது. இதையடுத்து தற்போது கன்னட சினிமாவின் மீது உலக சினிமா ரசிகர்களின் பார்வை விழ ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

புனீத் வெளியிட்ட பழைய வீடியோ:

இந்த நிலையில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுஎன்னவென்றால், கேஜிஎப் படத்தின் முதல் பாகம் வெளியானபோது நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் கேஜிஎப் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், தற்போது கேஜிஎப் 2 ரிலீஸ் ஆகும் போது அவர் உயிருடன் இல்லை. இந்த நிலையில் புனீத் முன்பு பேசி இருந்த வீடியோவை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கேஜிஎப் 2 படத்தின் வெற்றியை பார்க்க அவர் உயிரோடு இல்லை என ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

புனீத் குறித்த தகவல்:

கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி செய்து இருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புனீத்தின் இழப்பு கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் மற்றும் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்னும் இவர் மறைவில் இருந்து மீள முடியாத ரசிகர்கள், பிரபலங்கள் பலர் இருக்கின்றனர்.

Advertisement