சொகுசு பங்களாவில் தனிமைப்படுத்தபட்ட ராதாரவி- தற்போதைய நிலை என்ன?

0
1225
radharavi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ராதாரவி. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியும் ஆவார். இவருடைய தந்தை பிரபல நடிகர் எம் ஆர் ராதா என்பது குறிபிடத்தக்கது. தற்போது இவர் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் பதவியில் இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ராதாரவி அவர்கள் சென்னையிலிருந்து கோத்தகிரி சென்றதால் அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். கடந்த 10 ஆம் தேதி அன்று நடிகர் ராதாரவி அவர்கள் சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டி மார்வளா பகுதியில் உள்ள தன்னுடைய சொந்தமான சொகுசு பங்களாவுக்கு குடும்பத்துடன் சென்று தங்கியுள்ளார்.

-விளம்பரம்-
வைகோ தி.மு.க.வில் சேர முடிவு ...

இதை அறிந்த சுகாதாரத்துறையினர் நடிகர் ராதாவின் சொகுசு பங்களாவுக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் அரசு அனுமதி பெற்று தான் வந்துள்ளார்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பங்களா முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.

- Advertisement -

பின்னர் சில தினங்களுக்கு முன்பு ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினரின் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக சென்றனர். அப்போது அவர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் ராதாரவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பங்களாவுக்கு திரும்பிச் சென்றனர். ராதாரவி தன்னுடைய பங்களாவிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். பரிசோதனைக்கு பிறகு தான் ராதாரவிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா இருப்பதா? இல்லையா? என்பது தெரியவரும்.

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகையே உலுக்கி கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-விளம்பரம்-
Advertisement