இதை செய்த காட்டு..! நான் தருகிறேன்..! ஸ்ரீ ரெட்டிக்கு லாரன்ஸ் விட்ட சவால்..!

0
372
Sri-reddy

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அதில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், லாரன்ஸ் போன்றவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

Actress sri reddy

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி கூறிய கருத்திற்கு முதன் முறையாக இயக்குனரும், நடிகருமான லாரன்ஸ் பதிலளித்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ள அவர் ”நடிகை ஸ்ரீரெட்டியுடன் நான் தவறு செய்த்தாக பல மீடியா நண்பர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேள்வி கேட்டு வருகின்றனர். அதற்காக தான் நான் தற்போது இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

நடிகை ஸ்ரீரெட்டி, நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு வந்ததாகவும், அவரை நான் தவறாக பயன்படுத்திக்கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.மேலும் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைகும் அவர் வந்த போது அறையில் சாமி படங்களும், ருத்ராக்ஷ மாலையும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஓட்டல் அறையில் ருத்ராட்ச மாலையை வைத்து பூஜை செய்யும் அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.

கடவுளுக்கு தெரியும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று , ஸ்ரீரெட்டி மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர் அளித்துவரும் பேட்டிகளை நான் பார்த்துக் கொண்டு தான் வருகிறேன். அவர் மீது நான் பரிதாபம் கொள்கிறேன். அனைவரும் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பது தானே ஸ்ரீரெட்டி கூறி வரும் குற்றச்சாட்டாக இருக்கிறது.

ragava lawrance

சரி, நாம் ஒன்று செய்யோம் அவர் தன்னை ஒரு நல்ல நடிகை என்று தானே கூறுகிறார். அவரும் நானும் ஊடகத்திற்கு முன்னாள் சந்திக்கிறோம், நான் அவருக்கு சில சாதாரண நடன அசைவுகளையும், சில காட்சிகளையும் தருகிறேன் அப்போது அவர் ஒழுங்காக நடனமாடியும், நடித்தும் அவரது திறமையை நிரூபித்தால் அந்த இடத்திலேயே மீடியா முன்பு வைத்து எனது அடுத்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்து முன்பணம் தருகிறேன்” என்று சவாலான ஒரு அறிவிப்பை விட்டுள்ளார்.