நடிகர் லாரன்ஸ்ஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா. லாரன்ஸின் குடும்ப புகைப்படம் இதோ.

0
9655
Ragava-lawrance
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராகவும், நடன இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் லாரன்ஸ். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் லாரன்ஸ் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு பல்வேறு ரசிகர்களும் இருந்து வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாகவே நடிகர் லாரன்ஸ் சீமான் மற்றும் கமல் ரசிகர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார். இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் நடைபெற்ற தர்பார் இசை வெளியீட்டு விழாவில் லாரன்ஸ் பேசிய பேச்சுக்கள் தான் காரணம்.

-விளம்பரம்-

- Advertisement -

நான் சிறுவயதில் இருக்கும் போது கமல் போஸ்டருக்கு சாணி பூச்சி எல்லாம் இருக்கேன். அப்ப எனக்கு விவரம் தெரியாது. என் தலைவர் மேலே இருக்கிற பிரியத்தனால் தான் நான் செய்தேன். ஆனால், கமல், ரஜினி இவ்வளவு ஒண்ணா இருப்பாங்கனு எனக்கு தெரியாது. அதற்கு பிறகு தான் எனக்கு புரிந்தது. என்னுடைய தலைவர் அதிசயம், அற்புதம் நடக்கும் என சொன்னது அனைவருக்கும் பெரிய விஷயமா நினைக்கிறாங்க. ஆனால், அற்புதம், அதிசயத்திற்கு மறுபெயரே என்னுடைய தலைவர் தான் என்று பேசி இருந்தார்.

இதையும் பாருங்க : அது சின்னது, இது பெருசு. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய 2000ரூ உள்ளாடை பெண்.

ஆனால், சமீபத்தில் கமலை நேரில் சந்தித்த லாரன்ஸ் பின்னர் முகநூலில் பதிவிட்டது, எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமிளித்துள்ளேன். இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-
Ragava-lawrance-daughter

என்னதான் லாரன்ஸ் சர்ச்சையில் சிக்கினாலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும் ராகவி என்ற மகளும் உள்ளனர். ராகவி 1999ஆம் ஆண்டு பிறந்தார். ராகவேந்திரவின் தீவிர பக்தர் ஆன லாரன்ஸ் தனது மகளுக்கு ராகவி என பெயர் வைத்துள்ளார்.

சென்னையில் உள்ள எஸ்.பி.ஓ.எஸ் பள்ளியில் தான் படித்துள்ளார் ராகவி. பள்ளியில் படிக்கும்போதே தனது அப்பாவை போலவே அவருடைய ட்ரஸ்ட்டில் மெம்பர் ஆகி அங்கு உள்ள குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். மேலும், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தால் தற்போது SRM யூனிவர்சிட்டியில் இடம் கிடைத்து, தற்போது அங்கேய படிப்பை நிறைவு செய்து இருக்கிறாராம். தனது அப்பாவின் டான்ஸ் இவருக்கும் மிகவும் பிடிக்குமாம். இதனால் தனது கல்லூரியில் நடந்த விழாவிற்கு அப்பாவை கெஞ்சி வரவழைத்து அந்த ஸ்டேஜில் இருவரும் டான்ஸ் ஆடியுள்ளனர். இவரும் லாரன்ஸை போலவே ஒரு நடன இருக்குனராக வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

Advertisement