நான் நயன்தாரா கூட ஆடுனது விக்னேஷுக்கு பிடிக்கல ! எந்த நடிகர் தெரியுமா – புகைப்படம் உள்ளே !

0
12756
Actress Nayanthara

பல ஆண்டுகள் திரைத்துறையில் இருந்திருந்தாலும், சிலருக்கு ஏதோ ஒரு படம்தான் அவர்களுக்கான அடையாளத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில், ‘நானும் ரெளடிதான்’ படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர், ராகுல் தாத்தா.

ragul

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து சின்னச்சின்ன ரோல்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா, ‘நானும் ரெளடிதான்’ படம்தான் என்னை அடையாளப்படுத்துச்சு. அதுக்கு அப்புறம் நிறைய படங்கள் நடிச்சிட்டேன். இப்போ, ‘கஜினிகாந்த்’, ‘கீ’, ‘இரும்புத்திரை’, ‘குப்பத்து ராஜா’, ‘பதுங்கிப் பாயணும் தல’னு சில பல படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது. இப்போ ஜீவா படத்துல நடிக்க தாய்லாந்து போறேன்.

நயன்தாராவுக்கு லவ் லெட்டர்லாம் எழுதிருக்கீங்க. அவங்களை அவ்ளோ பிடிக்குமா, அவங்க உங்களுக்கு கிஃப்ட் ஏதாவது கொடுத்திருக்காங்களா?

எனக்கு நயனை ரொம்பப் பிடிக்கும். எப்போவும் என்னை ‘ராகுல்ஜி’னுதான் கூப்பிடுவாங்க. நான் அவங்களை ‘சீதா’னு கூப்பிடுவேன். ஏன்னா, தெலுங்குல சீதா கேரக்டர்ல நடிச்சது எனக்குப் பிடிக்கும். அடிக்கடி ‘உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க’னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. நான், எதுவும் வேண்டாம்னு சொல்லிடுவேன். ஆனா, அடுத்த மாசம் எனக்கு ஒரு வீடு வாங்கிக்கொடுங்கனு கேட்கலாம்னு இருக்கேன். சன் டிவில ஒரு ஷோவுல நானும் நயனும் டான்ஸ் ஆடிருப்போம். அதைப் பார்த்துட்டு விக்னேஷ் சிவன் கொஞ்சம் ஃபீல் ஆகிட்டாப்ளனா பார்த்துக்கோங்களேன்!.

ragul-thattha

உங்க பேரன் பேத்திகள் எல்லாம் உங்க படங்களைப் பார்த்துட்டு என்ன சொல்வாங்க?

“என் பேரப்பிள்ளைகள் எல்லாம் என் மனைவிகிட்ட, ‘ஏன் தாத்தாவைக் கண்டிக்காம விட்டுட்ட. அவர் நயன்தாராகூட டான்ஸ் ஆடிட்டு இருக்கார். தாத்தாமேல ஒரு கண்ணு வெச்சுக்கோ’னு சொல்லி புகார் கொடுக்குறாங்க. என் படம் ரிலீஸ் ஆச்சுனா, அவங்கதான் முதல்ல பார்த்துட்டு கமென்ட் சொல்வாங்க”