தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சரவணன். ஆரம்பத்தில் இவர் சில படங்களில் ஹீரோவாக நடித்ததான் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதற்குப்பின் வாய்ப்புகள் குறைந்த உடன் குணசித்திர வேடங்களில் சரவணன் நடித்து வந்தார். பின் இடையில் இவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். பின் இவர் பருத்திவீரன் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் மிரட்டிக்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் சரவணன் அவர்கள் 2003 ஆம் ஆண்டு சூர்ய ஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை. இதனால் சரவணன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின் மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முதல் மனைவி தனியாகவும், இரண்டாவது மனைவியுடன் சரவணன் வசித்து வந்தார். பின் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக சரவணன் அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் எதிர் எதிர் வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். முதல் மனைவியுடன் சரவணன் பேசிக்கொள்ளவில்லை
சரவணன் குறித்த தகவல்:
அதற்குப் பின் தன்னுடைய கணவர் சரவணன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசுவதாகவும் ஏற்கனவே ஆவடி காவல் ஆணையத்தில் சூர்ய ஸ்ரீ புகார் அளித்திருந்தார். அதை அடுத்து தனக்கு சாப்பிட உணவு கூட தருவதில்லை என்று நீதிமன்றத்தில் ஜீவானம்சம் கேட்டு சூர்ய ஸ்ரீ வழக்கு தொடர்ந்தார். அதன் பின் முதல் மனைவி சூர்ய ஸ்ரீ கேட்ட ஜீவானம்சம் வழங்க வேண்டும் என்று கடந்து இரண்டாம் தேதி நீதிமன்றம் சரவணனுக்கு உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து சில தினங்களுக்கு முன் நடிகர் சரவணன் மீது சூர்ய ஸ்ரீ புகார் அளித்து இருந்தார்.

சூர்ய ஸ்ரீ புகார்:
இந்நிலையில் இது தொடர்பாக சரவணன், அவருடைய இரண்டாவது மனைவியும் சேர்ந்து மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பேட்டியில் சரவணன், என்னுடைய முதல் மனைவி வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி எங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளை பற்றி கவனத்து வந்தார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்தார். கொலை மிரட்டல் விடுத்ததாக என் மீது பொய் புகார் அளித்தது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு சொந்தமான வாகனம் நிறுத்தும் இடத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்து அபகரிக்க என்னுடைய முதல் மனைவி முயற்சித்தார்.

சரவணன் பேட்டி:
நீதிமன்றம் மூலமாக மீண்டும் அந்த இடம் எங்களுக்கு கிடைத்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் அவர் என் மீது அவதூறு பரப்பி வருகிறார். சூர்யா மீதும் அவருக்கு உடந்தையாக உள்ள ராமமூர்த்தி என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் எங்களுக்கு கோர்ட்டில் விவாகரத்து அப்ளை செய்திருக்கிறேன். ஆனால், அவர் கொடுக்க மறுக்கிறார். என்னால் அவருடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். அது முழுக்க முழுக்க பணம் பறிக்க செய்யும் முயற்சி. அதோடு கேமராக்களை நாங்கள் எடுக்கவில்லை. கவர்மெண்ட் அதிகாரிகள் தான் அந்த இடத்தில் கேமரா வைக்க கூடாது என்று எடுத்தார்கள். எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கிறார்.






