மகனுக்காக வெளிநாட்டில் இருந்து வாங்கி கொடுத்த பைக், கண் முன்னே ஏற்பட்ட சோகம் – கோட்டா ஸ்ரீனிவாசனை வாழ்வில் நடந்த சோகம்.

0
154
- Advertisement -

கோட்டா சீனிவாச ராவ் குறித்து நடிகர் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் ராஜேந்திரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பாடகரும் ஆவார். இவர் 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த பிராணம் கீரகிடு என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல தெலுங்கு படங்களில் வில்லனாக மாஸ் காட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய நடிப்பு எந்த அளவிற்கு பிரபலமோ அதே போல் இவருடைய சிரிப்பும் மக்கள் மத்தியில் பிரபலம் என்று சொல்லலாம். இவர் தமிழில் 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த சாமி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். இதைத் தொடர்ந்து இவர் தமிழில் குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, ஜெயசூர்யா, பரமசிவன், கொக்கி, சாதுமிரண்டா, சத்தியம், தனம், பெருமாள், லாடம், ஜகன்மோகினி, கோ, சகுனி, தாண்டவம், ஆல் இன் ஆல் அழகுராஜா, மரகத நாணயம் போன்ற பல படங்களில் வில்லனாக மட்டுமில்லாமல் காமெடி கதாபாத்திரங்களும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

கோட்டா சீனிவாச ராவ் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அரசியலிலும் கவனம் செலுத்தி இருந்தார். அந்த வகையில் இவர் 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மட்டும் இல்லாமல் திரைபிரபலங்கள் பலருமே வாக்களித்து இருந்தார்கள்.

வைரலான வீடியோ:

அந்த வகையில் நடிகர் கோட்டா சீனிவாசராவும் வாக்களிக்க வாக்கு சாவடிக்கு சென்று இருக்கிறார். தற்போது அவருக்கு 81 வயது ஆகிறது. இவர் வயது மூப்பின் காரணமாக தள்ளாடிய நிலையில் ஒருவரை தாங்கிப் பிடித்துக் கொண்டு வாக்களிக்க வந்திருக்கிறார். இவருடைய இந்த வீடியோ தான் வைரலாகி இருக்கிறது. தற்போது இவருடைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலருமே எப்படி கம்பீரமாக இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே? என்று வருத்தத்துடன் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழில் கோட்டோ சீனிவாச ராவ்க்கு டப்பிங் குரல் கொடுத்த நடிகர் ராஜேந்திரன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், நானும் அவர் ஓட்டு போட வந்த வீடியோவை பார்த்தேன்.

-விளம்பரம்-

நடிகர் ராஜேந்திரன் பேட்டி:

கொஞ்ச நேரம் கூட அவரால் தொடர்ந்து நிற்க முடியவில்லை. அவருடைய உடல்நிலை ரொம்பவே மோசமாக இருக்கிறது. அதைப் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர் கூட பேசிய நாட்கள் இப்பவும் என் கண் முன் வந்து போகிறது. சாமி படத்துக்காக தான் அவருக்கு நான் முதன் முதலில் டப்பிங் பேசினேன். என்னுடைய வாய்ஸ் அவருக்கு ரொம்பவே பொருத்தமாக இருந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து தமிழில் அவர் நடித்த எல்லா படங்களுக்கும் நான் தான் டப்பிங் பேசினேன். தெலுங்கில் கூட நான் தான் குரல் கொடுத்தேன். அவர் பார்க்கத்தான் டெரர். ஆனால், பழகினவர்களுக்கு தான் தெரியும் அவர் ரொம்ப தங்கமானவர். அவர் எம்எல்ஏ பதவி எல்லாம் வகித்திருந்தாலும் எளிமையாக இருப்பார். எனக்கு தெரிந்து அவர் கண் முன்னாடியே அவருடைய ஒரு மகனின் மரணம் நடந்தது.

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் குறித்து சொன்னது:

அது அவருடைய மனதளவில் ரொம்பவே பாதித்தது. அவருடைய பையன் ஸ்போர்ட்ஸ் பைக் கேட்டதுமே வெளிநாட்டிலிருந்து வாங்கி கொடுத்தார். புது வண்டி எடுத்ததுமே குடும்பத்தோடு சேர்ந்து ஒரு ஓட்டலுக்கு பார்ட்டிக்கு போனார்கள். எல்லோரும் காரில் போயிறக்க, பையன் மட்டும் காருக்கு முன்னாடி பைக்கில் போய் இருந்தான். அப்பதான் ஒரு வேன் வந்து அவனுடைய பைக்கில் மோதி ஸ்பாட்டிலேயே அவருடைய மகன் இறந்து விட்டான். பணம், புகழ், பதவி என்று என்ன தான் இருந்தாலும் என் மகன் போயிட்டானே என்று நினைத்து ரொம்பவே வருத்தப்படுவார் அப்போதிலிருந்தே அவர் உனது உடல் அளவிலும் மனதளவிலும் உடைந்துவிட்டார். இப்போது அவர் ஓய்வில் இருக்கும் போது கூட சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வருடம் அவருடைய பிறந்தநாளுக்கு நேரில் சென்று போய் பேசணும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement