குஷ்புவிடம் இதை சொன்னதற்கு இப்போது வரை வருத்தப்படுகிறேன் என்று பேட்டியில் எமோஷனலாக சுந்தர் சி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. கடந்த 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ படத்தினை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இது தான் இவர் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களை இயக்கினார். மேலும், தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் தனது என்று நினைத்த சுந்தர்.சி அடுத்ததாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். இவர் ‘தலைநகரம், வீராப்பு, படத்தின் ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு போன்ற பல படங்களில் நடித்தார். அதன் பிறகு அவரே இயக்கி நடித்த ‘நகரம் மறுபக்கம், கலகலப்பு 1&2, அரண்மனை 1 & 2, 3’ போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
சுந்தர் சி திரைப்பயணம்:
அந்த வகையில் தற்போது சுந்தர் சி அவர்கள் அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இதில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ், ஜே பி விச்சு, விடிவி ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். மேலும், இதுவரை வந்த மூன்று பாகங்களை விட இந்த படத்தை கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனர் எடுத்திருக்கிறார்.
சுந்தர் சி பேட்டி:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சுந்தர் சியின் அரண்மனை 4 படம் வெளியானதில் இருந்தே அவரை குறித்து செய்திகள் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் அவர் நிறைய பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சுந்தர் சி, ஒருமுறை தமிழ்நாட்டுப் பெண்களுக்கு கற்பு என்பதே கிடையாது என்று குஷ்பூ சொன்னதாக ஒரு பத்திரிக்கையில் போட்டார்கள்.
குஷ்பூ குறித்த சர்ச்சை:
அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. ஆனால், அப்படியெல்லாம் அவர் சொல்லவே இல்லை. அவர் சொல்லாத வார்த்தையை சொன்னதாக பத்திரிகையில் போட்டிருந்தார்கள். ஒரு கணவனாக நான் என்னுடைய மனைவிக்கு தான் சப்போர்ட் செய்தேன். அந்த நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா தான். அவர், இதை அரசியல் ஆக்குகிறார்கள்.
குஷ்பூ குறித்து சொன்னது:
நீங்கள் ஒரு மன்னிப்பு கேட்பது போன்று ஒரு பேட்டி கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். நானும் குஷ்விடம், நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று விளக்கம் கொடுத்து விடு என்று சொன்னேன். ஆனால், குஷ்பூ ரொம்பவே அழுதுவிட்டார். நான் பண்ணாத தவறுக்கு எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அழுதார். அன்று நான் அவரிடம் அப்படி சொன்னதை நினைத்து இன்று வரை வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.