நடிகர் ராஜேஷ் இறப்பதற்கு முன்பே தனக்கு தானே கல்லறை கட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் ராஜேஷ். இவர் முதன்முதலில் பள்ளி ஆசிரியராகத்தான் பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் சினிமாவில் நடிக்க வந்தார். இவர் 70,80 காலகட்டத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர். இவர் வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்கள் நடித்து இருந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் படங்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலுமே நடித்திருக்கிறார். இவர் நடிகர் என்பதை தாண்டி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியிருந்தார்.
ராஜேஷ் குறித்த தகவல்:
இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் 2024 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியாகியிருந்த மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக இவர் youtube சேனலை தொடங்கி அதில் ஆரோக்கியம் மற்றும் ஜோதிடம் தொடர்பான பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். இன்னொரு பக்கம் இவர் உடல்நல குறைவால் அவஸ்த்தை பட்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை உடல்நிலை குறைவால் நடிகர் ராஜேஷ் காலமாகி இருக்கிறார். இவருடைய மறைவு தமிழ் திரை உலகில் பெரும் பேரதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=v3bujYG4ywI
ராஜேஷ் மறைவு:
இவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு இடையே இவர் ஜோன் சில்வியா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருடைய மனைவியும் உடல்நிலை குறைவால் 2012 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு திவ்யா, தீபக் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். தற்போது ராஜேஷ் உடைய உடல் சென்னை ராமபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து அவருடைய மகள் வந்ததுமே அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ராஜேஷ் தம்பி பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் ராஜேஷின் மறைவு குறித்து அவருடைய தம்பி அளித்த பேட்டியில், இறப்பதற்கு முன் தினம் காலையில் இருந்து அண்ணன் எல்லோரையுமே உத்து உத்து பார்த்துக் கொண்டிருந்தார். அன்று மாலையில் இரவு ரொம்ப சீக்கிரமாகவே அண்ணன் தூங்க போய்விட்டார். நேற்று காலை சீக்கிரமாகவே அண்ணன் எழுந்தார். அவருடைய மகனிடம் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசி இருந்தார். அவர் நினைத்திருந்தால் அப்பவே ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கலாம். நேரம் யாரைவிடும். பின் வலி என்பதால் அவர், எனக்கு உடலில் ஏதோ செய்கிறது. ஆக்சிஜன் லெவல் குறைந்த மாதிரி இருக்கிறது.
https://www.youtube.com/shorts/xDG0sGWKOA0
ராஜேஷின் கடைசி நிமிடங்கள்:
நம்ம ஃபேமிலி டாக்டரிடம் கூட்டிட்டு போங்க என்று சொன்னார். நாங்களும் டாக்டருக்கு போன் செய்திருந்தோம். என்னுடைய அண்ணனின் மகன் தான் அண்ணனை ஆம்புலன்ஸில் கூட்டிக்கொண்டு போனார். போகும்போது பாதி வழிலேயே அண்ணன் கண்கள் ரெண்டுமே மேல பார்த்து சொருகி விட்டது. அண்ணனின் கண்களை பார்த்து எங்களுக்கு ரொம்ப பயமாக இருந்தது. அண்ணனுக்கு இதுபோன்று நடந்ததே இல்லை. என்னாச்சு என்று பதறிக் கொண்டே இருந்தோம். ஆனால், பாதியில் அண்ணனுடைய உயிர் போகிவிட்டது. அடுத்த வாரம் அண்ணன் மகனுக்கு எங்கேஜ்மென்ட் நடக்க இருந்தது. அதற்குள்ளே இவர் நடந்தது எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கண்கலங்கி கூறி இருந்தார்.






