நடிகர் ராஜேஷ் 1949ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவர் கிறிஸ்துவத்தை பாலோ செய்தவர். இவருடைய உண்மையான பெயர் ஸ்வார்ட்ஸ் வில்லியம்ஸ்.
இவர் காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் பியூசி முடித்துவிட்டு சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியில் டிகிரி படிக்க சென்றார்.ஆனால் இவரை அங்கு அவரது டிகிரியை முடிக்க முடியவில்லை. அதன்பின்னர் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசியரியராக வேலை செய்து வந்தார்.
தனது 24 வயதில் 1979ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை என்னும் படத்தில் சின்ன ரோலில் நடித்து அறிமுகம் ஆனார்.அதன்பின்னர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 150 படம்களுக்கு மேல் நடித்தார். ராஜேஷ் தமிழில்.
கன்னி பருவத்திலே,பில்லா,அந்த ஏழு நாட்கள்,தனிக்காட்டு ராஜா,பயணங்கள் முடிவதில்லை,தாய் வீடு,ஆலய தீபம்,ஜெய் ஹிந்த்,என பல ஹிட் படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதியின் தர்மதுறை படத்தில் டாக்டராக நடித்தார்.இவருக்கும் ஜோன் சில்வியா என்பவருக்கும் 1983ஆம் ஆண்டு திருமணம் ஆனது.இவர்களுக்கு திவ்யா மற்றும் தீபக் என இரண்டு குழந்தைகள் உள்ளது.
இவருடைய மகன் தீபக் கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். ராஜேஷின் மனைவி சில்வியா 2012ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.ராஜேஷ் தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் பிஸ்னஸ் செய்து வருகிறார்.