இனி நிம்மதியாக செத்துப்போவேன்..! ரஜினியை துரத்தி சென்ற இளைஞன்..! புகைப்படம் உள்ளே

0
728
Actorrajini

தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பல்வேறு ரசிகர் பட்டாளங்களை கொண்ட ஒரு மாபெரும் நடிகர். தற்போது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள இவர் சமீபத்தில் விமான நிலையம் சென்ற போது, இவரை ஒரு இளைஞர் விமானநிலையம் வரை துரத்தி சென்றுள்ளார்.

சமீபத்தில் தூத்துக்குடியில் 13 பொது மக்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ரஜினி தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி சென்றுள்ளார்.

இன்று காலை தூத்துக்குடி செல்வதற்க்காக தனது வீட்டில் இருந்து விமனநிலையத்திற்கு காரில் சென்றுள்ளார் ரஜினி. அப்போது இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் ரஜினி சென்று கொண்டிருந்த காரை விமான நிலையம் வரை பின் தொடர்ந்து வந்துள்ளார்.

இதனை கவனித்ததும் ரஜினி தனது ஓட்டுனரிடம் காரை நிறுத்த சொல்லிவிட்டு, அந்த இளைஞசரிடம் எதற்குபா என்னை பின் தொடர்ந்து வருகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் ”தலைவா ஒரே ஒரு போட்டோ தலைவா ” என்று கேட்க ரஜினியும் சிரியத்துக் கொண்டே “சரி டா கண்ணா” என்று கூறி அவருடன் செல்பி புகைப்படம் ஒன்ரை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அந்த நபர் ஆனந்தத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.