காவிரி பிரச்சனை ! ரஜினியின் ட்வீட் ! அரசியல் குறித்து அதிரடி முடிவு தெரிவித்த ரஜினி !

0
796
Rajini kanth

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தனது அரசியல் ப்ரெவேசத்தை அறிவித்தார் ரஜினி. இருப்பினும் ரஜினிக்கு பின் அரசியலுக்கு வந்த கமல் கட்சியின் பெயர், சின்னம், கொடி என்று எல்லாவற்றையும் அறிவித்துவிட்டார்.

rajinikanth

ஆனால் கமலுக்கு முன்னர் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ரஜினியின் கட்சி பணிகள் சற்று மந்தமாக தான் இருந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ரஜினியின் கட்சி குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்க பட்டது.இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் ராஜினியை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது ரஜினியின் கட்சி அறிவிப்பு குறித்து ஆலோசிக்க பட்டதாக தெரியவருகிறது.

இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் தற்போது காவேரி மேலாண்மை அமைக்க கோரி பல இடங்களில் போராட்டம் நடந்து வரும் இந்த சூழ்நலையில் கட்சி அறிவிப்பு , மாநாடு தேதி போன்ற விஷயங்களளை அறிவித்தால் சரி இருக்காது என்று தங்களின் கருத்தை தெரிபித்துள்ளனராம்.

Chennai: Tamil actor Rajinikanth addresses his fans on the fourth day of a six-day-long photo session in Chennai, on Friday. Rajinikanth is expected to announce his decision to join politics on December 31. PTI Photo by R Senthil Kumar (PTI12_29_2017_000131B)

எனவே ரஜினியும் தனது நிர்வாகிகளின் யோசனையை ஏற்றுக்குக்கொண்டு காவேரி போராட்டங்கள் சற்று ஓயும் வரை தனது கட்சி விஷயங்களை தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளாராம். இதனால் நீண்ட நாட்களாக ரஜினி விரைவில் கட்சி பணிகள் குறித்த அறிவிப்பை தெரிவித்துவிடுவர் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றத்தில் உள்ளனர்.