இதுவே நான் இருந்தால் தூக்கில் தொங்கி இருப்பேன்- ரஜினி சொன்ன ரகசியத்தை பேட்டியில் போட்டு உடைத்த படையப்பா பட பிரபலம்

0
907
padaiyappa
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டங்களில் தொடங்கி இன்று வரை இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதோடு இவருடைய நடிப்பு திறமைக்காக கடந்த ஆண்டு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இதற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.

-விளம்பரம்-

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட மீனா, நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான வீடியோ எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்பது போல் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து படம் பண்ணுகிறார்கள்.

- Advertisement -

நெல்சன்-ரஜினி கூட்டணியில் படம்:

நெல்சனின் டாக்டர் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு நெல்சன், ரஜினியை வைத்து படம் பண்ணுகிறார். தன்னுடைய நான்காவது படத்திலேயே சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்திருக்கிறது. மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படங்களில் ஒன்று படையப்பா. இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா.

படையப்பா படம் பற்றிய தகவல்:

இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது. இந்த படம் கமலஹாசனின் இந்தியன் பட வசூலை முறியடித்து சாதனை செய்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் மூலம் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு திரைப்பயணத்தில் ஒரு மாற்றம் கிடைத்தது என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த படமும் படையப்பா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க பக்கா ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக இருந்தது. இன்றும் இந்த படத்தை ரசிக்கிற கூட்டமும் அதிகம்.

-விளம்பரம்-
K.S Ravikumar Shared The Worst Aspect In Rajinikanth Padayappa

படையப்பா படம் அனுபவம் குறித்து கனல் கண்ணன் அளித்த பேட்டி:

மேலும், இந்த படம் வெளியாகி 23 வருடங்கள் ஆகியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் படையப்பா படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் படையப்பா படம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனும் பகிர்ந்திருக்கிறார். படையப்பா படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பணிபுரிந்து இருக்கிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரஜினி தன்னிடம் சொன்ன விஷயம் குறித்து பேசுகிறார். அதில் அவர் கூறியிருப்பது, கே எஸ் ரவிக்குமார் என்னை எப்போதும் செட்டில் ஸ்டண்ட் செய்யும்போது பயங்கரமாக திட்டுவார். என்னை அறிமுகம் செய்ததே அவர் தான் என்பதால் அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு.

கனல் கண்ணனிடம் ரஜினி சொன்னது:

அப்படி அவர் என்னை பயங்கரமாக திட்டியதை ரஜினி சார் பார்த்து என்னை தனியாக அழைத்துச் சென்று இதுவே அவர் என்னை அப்படி திட்டி இருந்தால் தூக்கில் தொங்கி இருப்பேன் என்று விளையாட்டாக சொன்னார் என்று கூறி இருந்தார். இப்படி ரஜினி கூறியதை கனல் கண்ணன் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கனல் கண்ணன் அவர்கள் தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் மாஸ்டராக பணிபுரிகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

Advertisement