‘அண்ணா அண்ணா என்று என்னை’ – விவேக் பற்றி ராஜ்கிரண் எழுதிய உருக்கமான கவிதை.

0
933
raj
- Advertisement -

சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-
Rajkiran: It's dhanush's wish to see me in this avatar | Tamil Movie News -  Times of India

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவேக்கின் மறைவில் இருந்து மீள முடியாமல் பலர் இருந்து வரும் நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ராஜ்கிரண், விவேக்கின் மறைவு குறித்து தனது முகநூல் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

இதையும் பாருங்க : சின்ன தம்பி சீரியல் நடிகையா இப்படி ஒரு மோசமான படத்தில் நடித்துள்ளார். வீடியோ இதோ.

- Advertisement -

ராஜ்கிரண் விவேக்கிற்காக எழுதிய கவிதை:

தம்பி விவேக்,
அண்ணா அண்ணா என்று
என்னை வாய் நிறைய அழைத்த
போதெல்லாம்,
அன்பைத்தேடிப்போனாய்
அறிவைத்தேடிப்போனாய்
பண்பைத்தேடிப்போனாய்
எல்லாவற்றையும் என்னால்
புரிந்து கொள்ள முடிந்தது,
மகிழ்ச்சியாய் இருந்தது…

-விளம்பரம்-


இப்பொழுது,
தாயைத்தேடிப்போனாயோ
தனயனைத்தேடிப்போனாயோ
யாரை நம்பிப்போனாயோ
எதையுமே என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை,
மனம் தவிக்கிறது…
என்ன நினைத்து என் மனதை தேற்றிக்கொள்ள முயன்றாலும்,
என் அறிவு, உன் இழப்பை
ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது…

Advertisement