ரெண்டு அண்ணன் ஒரு அக்கா, உண்மையான பெயர் குமரேசன். தியேட்டரில் வேலை – ராமராஜன் குறித்து பல விஷயங்களை சொன்ன அவரின் சொந்த அக்கா.

0
893
Ramarajan
- Advertisement -

90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுஸரில் இருந்தே அந்த படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும். சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

-விளம்பரம்-

இன்னும் கரகாட்டக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. இதனிடையே ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பின் 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி. நடிகர் ராமராஜன் – நளினியின் மகன் ஆர் அருண். ராமராஜனும் நளினியும் விவாகரத்து செய்து கொண்டாலும், மகனின் திருமணத்தை சேர்ந்தே நடத்தினர்.

- Advertisement -

ராமராஜனின் குடும்பம்:

மேலும், ராமராஜனின் மகள் அருணா. இவர் பிரபல தனியார் வங்கியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதேபோல் தன் மகளின் திருமணத்தையும் இருவரும் சேர்ந்து நடத்தி வைத்து இருந்தார்கள். தற்போது நளினி சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். ராமராஜன் தன்னுடைய அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ராமராஜனின் அக்கா அளித்துள்ள பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய பெயர் வைராத்தாள். என்னுடைய கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

ராமராஜனின் அக்கா அளித்த பேட்டி:

நான் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்தேன். நான் ராமராஜனின் அக்கா. என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணா, ஒரு அக்கா, நான், கடைசியில் ராமராஜன். ராமராஜனின் உண்மையான பெயர் குமரேசன். ராமராஜனுக்கு சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம். அதனால் அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார் நடித்திருக்கிறார். பின்பு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு சினிமா தியேட்டரில் வேலை கிடைத்தது.

-விளம்பரம்-

ராமராஜனுக்கு கிடைத்த படவாய்ப்பு:

அப்போது தான் அவருக்கு பிரபல இயக்குனரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் உதவி இயக்குனராக படங்களில் வேலை செய்து இருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே படிப்படியாக படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். ராமராஜன் அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவார். கொரோன தொற்று காரணமாக தான் அவர் இரண்டு வருடங்களாக இங்கு வரவில்லை. இருந்தாலும் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

ராமராஜனின் அக்கா குடும்பம்:

எனக்கு ஒரு பெண், இரண்டு ஆண் பிள்ளைகள். மூவருமே படித்து வேலையில் இருக்கிறார்கள். மூவருக்குமே திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. ராமராஜன் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். அடித்து விட்டு கொடுத்தால் கூட வாங்கிக் கொள்ளும் குணம் உடையவர். ஆனால், அவருடைய குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததால் மனவருத்தம் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இப்படி ராமராஜனின் அக்கா அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement