சிவாஜி பிறந்தநாள் விழா, முன்னாள் வரப் பார்த்தவரை கை முட்டியால் குத்தி தள்ளிய சிவாஜியின் மகன் ராம்குமார்

0
85
- Advertisement -

சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவில் மேடைக்கு முந்தி சென்ற நபரை சிவாஜி மகன் தாக்கி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. இவர் விழுப்புரத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி. இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக்கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

பின் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்து இருந்தார். அதிலும் இவர் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்திருந்தார். சிவாஜி என்பது நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்று கூறினால் அது மிகையாகாது.

- Advertisement -

சிவாஜி கணேசன் குறித்த தகவல்:

மேலும், தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்பிற்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன். கடைசியாக இவர் நடித்த படம் படையப்பா. மேலும், இவரின் மகன்கள், பேரன்கள் எல்லாம் சினிமா துறையில் வாழை அடி வாழையாய் வருகிறார்கள்.

சிவாஜி மறைவு:

இப்படி பெயரும் புகழும் சம்பாதித்த சிவாஜி அவர்கள் தன்னுடைய 71 வயதில் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி இறந்தார். சிவாஜி கணேசன் இவ்வுலகை விட்டு போனாலும் யார் மனதை விட்டும் நீங்கவில்லை. இன்றும் அவருடைய பெருமைகள் பேசப்பட்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இன்று சிவாஜி கணேசனுடைய பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டுமே சிவாஜியின் பிறந்த நாளை அவருடைய குடும்பத்தினர், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

சிவாஜி கணேசன் பிறந்தநாள்:

அந்த வகையில் இன்று சிவாஜியின் 97வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள். சிவாஜியின் சிலைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி இருந்தார். இவரை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகர்கள் என பலரும் சிவாஜி கணேசனின் சிலைக்கு நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார். இந்த விழாவில் ஏராளமான ரசிகர்களுமே கலந்து கொண்டிருந்தார்கள்.

சிவாஜி மகன் செய்த வேலை:

மேலும், விழாவில் நடிகர் பிரபு மேடையில் பேசிக் கொண்டிருந்தார். சிலர் மேடையில் ஏற முயன்றார்கள்.
உடனே பின்னால் இருந்த ஒருவர் திடீரென மேடையில் ஏற முயன்றார். இதனால் கோபப்பட்ட சிவாஜி கணேசனுடைய மூத்த மகன் ராம்குமார் தன்னுடைய கை முட்டியால் அந்த நபரை ஓங்கி குத்தி தள்ளிவிட்டு தன்னுடைய கோபத்தை காண்பித்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement