குறிப்பிட்ட சமூகத்தில் தான் நாடக காதல்? சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த நடிகர் ரஞ்சித்

0
294
- Advertisement -

நாடக காதல் குறித்த சர்ச்சைக்கு நடிகர் ரஞ்சித் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே நடிகர் ரஞ்சித்தின் கவுண்டபாளையம் படம் குறித்த செய்திகள் தான் அதிகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் இந்த படம் இயக்க ஆரம்பத்திலிருந்து பல சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது. குறிப்பாக, நடிகர் ரஞ்சித் அவர்கள் மறைமுகமாக வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களை தாக்கி பேசியிருக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்பில் ரஞ்சித்திடம் நாடக காதல் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், நான் ஒரு சமூகத்தை குறிப்பிட்டு படம் எடுக்கவே இல்லை. நாடக காதல் என்பது எல்லா சமூகத்திலும் நடக்கலாம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சொல்லி படம் எடுப்பது தவறான ஒன்று. உலகம் முழுக்க இருக்கக்கூடிய பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கான ஒரு படம். இது சாதி வேறுபாடு எல்லாம் கிடையாது.

- Advertisement -

நாடகக்காதல் குறித்து ரஞ்சித்:

எந்த ஜாதியில் நாடக காதல் நடந்தால் கஷ்டம் தான். இது முழுக்க முழுக்க பெற்றவர்களுக்கான படம். இது காதலுக்கு எதிரான படம் கிடையாது. நாடகக்காதல் செய்பவர்களுக்கு தான் ஏமாற்றுவேலை தெரியும். வசதியாக இருப்பவர்களை டார்கெட் செய்து அவர்களுடைய ஏமாற்றி பணத்தை சுரண்டுவதற்காக காதலை பயன்படுத்துகிறார்கள். அதைத்தான் நான் படத்தில் சொல்லியிருக்கிறேன். பணத்திற்காக செய்யக்கூடிய ஒரு தருதல நிகழ்ச்சியை தான் நான் நாடக காதல் என்று சொல்ல வருகிறேன்.

வள்ளி கும்மி குறித்து சொன்னது:

அதற்குப் பின் நிகழ்ச்சியில் ரஞ்சித், நடனம் ஆடுகிறேன் என்று அரைகுறையாக ஆடை அணிந்து ஆடுகிறார்கள். எங்க பொண்ணுங்க ஆடும் போது தான் எவ்வளவு கலாச்சாரம் தெரியுது பாருங்க. வள்ளி கும்மியில் எங்க பொண்ணுங்க ஆடும்போது எங்கேயாவது உடம்பு தெரியுதா? பூமியில செருப்போடு ஆடும் போது பூமிக்கு வலிக்கும் என்று செருப்பு கழட்டிட்டு ஆடுற ஜாதி நாங்க. இதுதான் நம்ம கலாச்சாரம். அது எனக்கு பெருமை என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

ரஞ்சித் குறித்த தகவல்:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரஞ்சித். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இறுதியாக இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடித்த ‘அதிபர்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சிறிய இடைவெளிக்கு பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ தொடர் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார்.

குழந்தை C/O கவுண்டம் பாளையம்:

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் பழனிச்சாமி என்ற ரோலில் கலக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் ‘குழந்தை C/O கவுண்டம் பாளையம்’. நாடக காதலை மையமாக வைத்து இந்த படத்தை நடிகர் ரஞ்சித் எடுத்து இருக்கிறார். இந்த படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், வெளியாகவில்லை. பின் இந்த படத்தினுடைய ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதிலிருந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

Advertisement