அரபிக்கடலுக்கு அருகில் நடிகர் ரன்வீர் சிங் – தீபிகா வாங்கி இருக்கும் புதிய வீடு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் 2010 ஆம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப் படத்தின் மூலம் தான் பாலிவுட் திரைப்படத் துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.இதனிடையே இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை தீபிகா படுகோன் அவர்கள் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். இவர் பாலிவுட்டில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் விளம்பர அழகியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், இந்தி ஆகிய பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஐம்பது படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார். பின் தீபிகா- ரன்வீர் சிங் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பின்னரும் தீபிகா படுகோன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : அந்த மொக்க படத்தில் நடிப்பதற்கா பொன்னியின் செல்வன வேணாம்னு சொன்னீங்க – கீர்த்தி சுரேஷை நினைத்து புலம்பும் ரசிகர்கள்.
ரன்வீர்- தீபிகா வாங்கிய புது வீடு:
இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங் வாங்கிய புது வீடு குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. மும்பையில் பிரபாதேவி ஏரியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4 பெட்ரூம் உடன் கூடிய பிளாட்டில் தீபிகா- ரன்வீர் சிங் வசித்து வருகின்றனர். தற்போது ரன்வீர் சிங் அவர்கள் மும்பை பாந்திராவில் கடற்கரை அருகில் நடிகர் ஷாருக்கானின் வீட்டிற்கு அருகில் புது வீடு ஒன்று வாங்கி இருக்கிறார். இந்த வீட்டின் மதிப்பு 119 கோடி ஆகும். மேலும், 19 கார்களை பார்க்கிங் செய்வதற்கான உரிமையையும் சேர்த்து ரன்வீர்சிங் வாங்கி இருக்கிறார்.
புது வீடு குறித்த தகவல்:
அதோடு இவருடைய தந்தை ஜுக்ஜீத் சுந்தர் சிங்குடன் சேர்ந்து இந்த வீட்டை தனது கம்பெனி பெயரில் பதிவு செய்திருக்கிறார் ரன்வீர். பாந்த்ரா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் சாகர் ரேசம் என்ற கட்டிடத்தில் 16வது மாடியிலிருந்து 19 வது மாடி வரை ஒவ்வொரு மாடியிலும் ஒரு வீடு என்ற வீதம் ரன்வீர் வாங்கி இருக்கிறார். நான்கு நாடுகளில் இருக்கும் வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும். இந்த வீட்டை வாங்குவதற்கான பத்திரப்பதிவு கடந்த 8ஆம் தேதி நடந்துள்ளது. பத்திரப்பதிவின்போது ஆவணங்களில் ரன்வீர்சிங் தந்தை கையெழுத்து இட்டிருக்கிறார்.
புது வீட்டின் பதிவு:
இதற்காக முத்திரை தீர்வாக 7.13 கோடியை ரன்வீர் சிங் அரசுக்கு செலுத்தி இருக்கிறார். வீட்டின் மொத்த பரப்பளவு 11,266 சதுர அடி. இதுதவிர 1300 சதுர அடி மாடிப் பகுதியில் அடங்கும். ஒரு சதுர அடிக்கு ரூ.1.05 லட்சம் என்ற கணக்கில் ரன்வீர்சிங் இந்த வீட்டை வாங்கி இருக்கிறார். ஏற்கெனவே இருந்த பழைய கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஆகவே கீழ் தளத்தில் ஏற்கெனவே பழைய கட்டடத்தில் வசித்தவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் மேல் மாடிகளில் இருந்து அரபிக்கடலை மிகவும் அருமையாக கண்டுகளிக்க முடியும்.
ரன்வீர்- தீபிகா சொத்துக்கள்:
ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா படுகோன் உடன் புதிய வீடு கட்டப்படும் இடத்தை பார்வையிட்டு சென்றிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ரன்வீர்- தீபிகா படுகோன் இருவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே, மும்பைக்கு அருகே 22 கோடி மதிப்பிலான புதிய பங்களாவை ரன்வீர்- தீபிகா வாங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இவர்களுக்கு மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.