சாமியார் கூட போனவங்க தான நீங்க..!சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..!

0
419
Chinmayi

கடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு பெண்களும் #METOO என்ற ஹேஸ்டேகில் இணைந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

radharavi

பாடகி சின்மயி, வைரமுத்துவிடம் மற்றும் நின்று விடாமல் பெண்களுடன் தவறாக நடந்து கொண்டதாக கூறி பல்வேறு பிரபலங்களின் பெயரை கூறி வருகிறார். அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் ராதா ரவியும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்று ட்விட்டரில் குற்றச்சாட்டை முன்வைத்தார் சின்மயி.

இந்நிலையில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ராதாரவி இது குறித்து பேசிய போது , ஊர்ல இருக்கற எல்லா சாமியர் எல்லாம் ரேப் பண்றாங்னுக, அவுங்க மேல எல்லாம் யாருமே புகார் கொடுக்க மாட்டாங்க. ஆனால், அந்த சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்னை வந்து குறை சொல்வது தான் வேடிக்கையாக இருக்கின்றது என்று பேசியுள்ளார்.

மேலும், சின்மயி தன் வைத்துள்ள குற்றச்சாட்டு போலியானது என்றும் நான் தவறு செய்தால் என் மீது வழக்கு போடுங்கள், நான் தயார். இவ்வாறு பேசி உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் பேசியுள்ளார்.