நடிகர் ரவி மோகன் வெளியிட்டு இருக்கும் திடீர் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஆர்த்தி-ரவி சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இது தொடர்பாக ஆர்த்தி, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி இருந்தார். அதோடு ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. இப்படி இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

அதன் பின் ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தான் நடிகர் ரவி அவர்கள் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இருவருமே மேட்சிங் உடை அணிந்திருந்தார்கள். இது தான் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெனிஷா, வாழ்வில் வெல்ல வேண்டும் என்ற கனவுகள் கொண்டவர்களுக்கு இரண்டு தேர்வுகள் இருக்கிறது. ஒன்று ஆதரவான துணை இருக்க வேண்டும் அல்லது துணையே இல்லாத வாழ்க்கை தான் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
ஆர்த்தி பதிவு:
இப்படி சர்ச்சைகள் வந்து இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மீண்டும் ரவி-கெனிஷா இருவருமே ஐசரி கணேஷ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்று இருந்தார்கள். இதை அடுத்து ஆர்த்தி ரவி தன்னுடைய மகன்களோடு இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து எமோஷனலாக பதிவு ஒன்று போட்டு இருந்தார். இதை எடுத்து ஆர்த்தி- ரவி விவகாரம் தொடர்பாக நிறைய சர்ச்சைகள் இணையத்தில் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ரவி மோகன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நாடு கூட்டு நெருக்கடியை எதிர்கொள்வது போன்ற சூழலில் தான் தனிப்பட்ட விஷயங்கள் பொது மக்களினுடைய கருத்துக்கணிப்பில் விசாரிக்கப்படுவது ரொம்ப வேதனையாக இருக்கிறது.

ரவிமோகன் அறிக்கை:
இதைவிட நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் உண்மை இல்லாமல் நிறைய விஷயங்கள் திரிக்கப்படுவது தான் அதிர்ச்சியாக இருக்கிறது. என்னுடைய மௌனம் பலவீனம் கிடையாது. அது உயிர் வாழ்வதற்கான முயற்சி. ஆனால், அது என்னுடைய பயணத்தையோ, காயங்களையோ அறியாதவர்கள் என்னுடைய நேர்மையை கேள்விக்குள் ஆக்கும் போது நான் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். என்னுடைய கடந்த கால திருமண உறவுகளை யாராவது தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ புகழுக்கு பேச முயற்சிப்பத்ற்கு நான் அனுமதிக்க மாட்டேன். இது என்னுடைய வாழ்க்கை. என் உண்மை, நான் குணமடைந்து வரும் பாதை, சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அது உண்மையை வெளிச்சத்தில் கொண்டுவரும். என்னுடைய திருமண வாழ்க்கையில் பல ஆண்டுகாலமாக உடல், மன, உணர்ச்சி மற்றும் நிதி ரீதியான துன்பங்களை நான் அனுபவித்தேன்.
View this post on Instagram
அந்த ஆண்டுகளில் எப்போதும் நான் தனிமைப்பட்டு தான் இருந்தேன். என்னுடைய திருமணத்தை குணப்படுத்தவும் காப்பாற்றவும் நான் முயன்றாலுமே உறுதியான முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தது. என்னுடைய முன்னாள் மனைவி உட்பட அனைவரின் தனி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். ஆனால், மௌனம் குற்றமாக கருதப்படுகிறது. என்னுடைய சமீபத்திய பொதுவெளி தோற்றத்தின் அடிப்படையில் ஒரு தந்தையாக என் மீது நிறைய கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. நான் தெளிவாக சொல்கிறேன், இந்த கற்பனை கூற்று கருத்துக்களை எல்லாம் நான் மறுக்கிறேன். உண்மையான பக்கம் நான் எப்போதும் நிலைத்திருக்கிறேன். தற்போது நான் எடுத்த முடிவால் முன்பு இருந்ததை விட இப்போது நிறைய மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நான் வீட்டை விட்டு வெளியேறும்போது எக்ஸ் என்ற சொல் என்னுடைய இதயத்தில் வந்துவிட்டது. அது என் இறுதி மூச்சு வரை அப்படியே இருக்கும். பொது வெளியில் என் குழந்தைகளை கருவிகளாக பயன்படுத்துவதை பார்க்கும்போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய சொந்த குழந்தைகளை பார்ப்பதையோ, பேசுவதை கூட பவுன்சர்கள் மூலம் தடுக்கிறார்கள். நீங்கள் ஒரு தந்தையாக என்னுடைய பங்கை கேள்வி குறியாக்குகிறார்கள்? என் குழந்தைகள் ஒரு கார் விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மூன்றாம் தரப்பினர் மூலம் தான் நான் தெரிந்து கொண்டேன். ஒரு ஆணாகவும் தந்தையாகவும் நான் விலகிச் செல்ல எடுத்த பலத்தை அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள். புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் வாழ்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






