பொன்னியின் செல்வன் படத்திற்காக வேற லெவலில் உடலை ஏற்றியுள்ள ரியாஸ் கான்.

0
57890
Riyaz-Khan
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் மக்களிடையே பிரபலமாவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். அதிலும் ஒரு சில பேர் மட்டும் தான் மக்கள் சில நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகர் ரியாஸ் கான். இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் தான் அதிகம் நடித்து உள்ளார். தமிழில் பல படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து உள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ‘பாடிபில்டர்’ ஆவார். முதலில் இவர் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் தான் நடித்து வந்தார். பிறகு தான் இவருக்கு சினிமாவில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Ready for ponniyin selvan #maniratnam #action

A post shared by Riyaz Khan (@riyazkhan09) on

மேலும், விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட தன் மகனை கலந்து கொள்ள செய்தார். இவருடைய மனைவி உமா ரியாஸ் கான். இவரும் பிரபல நடிகை மற்றும் மெமிக்கிரி ஆர்டிஸ்ட் ஆவார். எப்போதுமே நடிகர் ரியாஸ் கான் அவர்கள் உடற்பயிற்சி செய்வதில் அதிக கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருவார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக இவர் ஒரு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரிய வந்து உள்ளது.

இதையும் பாருங்க : ஏ ஆர் இசை கச்சரியில் காஜல் செய்த கசமுசா. ஆண் நண்பருடன் அடித்த கூத்த பாருங்க. வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

மேலும், இவர் உடற்பயிற்சி செய்து போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். அதில் நடிகர் ரியாஸ் கான் அவர்கள் தற்போது ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சும் அளவுக்கு உடலை கட்டுக்கோப்புடன் வைத்து உள்ளார். இப்படி 47வது வயதில் இந்த அளவுக்கு உடலை கட்டுக்கோப்புடன் மாற்றி உள்ளாரா!! என்று அனைவரும் வியந்து போய் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிக வரவேற்பையும் பாராட்டையும் தந்து வருகின்றனர். அதோடு ரியாஸ்கான் புகைப்படத்திற்கு ‘சும்மா லைக்ஸ் அல்லுது இல்ல’.

தமிழ் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து வருகிறார் இயக்குனர் மணிரத்தினம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், கிஷோர், அஸ்வின் காக்கமனு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது என்று செய்திகள் வெளியாகின. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. அதோடு ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் குறித்த தகவல்கள் அதிகார பூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள்.

-விளம்பரம்-
Advertisement